ஒரு எழுத்து தரும் வெவ்வேறு அர்த்தங்கள்! ஆச்சார்யாள் அருளமுதம்!

Published:

abinav vidhya theerthar 1 - 2026

ஒரு சமயம் பிரம்மா தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் அசுரர்களுக்கும் உபதேசம் செய்தார். அவர்கள் எல்லோருக்கும் பிரம்மா த த த என்ற ஒரே வார்த்தையை உபதேசத்தை அளித்தார். பொதுவாகவே தேவர்களுக்கு இந்திரிய சுகங்களில் சற்று அதிகமாக நாட்டம் இருக்கும். ஆகையால் பிரம்மா தங்களைப் புலனடுக்கத்தோடு இருக்கச் சொன்னதாக அவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.

அதாவது த என்ற எழுத்து தாம்யத உங்களை அடக்குங்கள் என்ற சொல்லை குறிப்பதாக அவர்கள் அர்த்தம் செய்து கொண்டார்கள்.

மனிதர்கள் இயற்கையிலே சுயநலக் காரர்களாக இருப்பதால் தங்கள் வருங்காலத்திற்காக நிறைய செல்வத்தைச் சேமித்து வைத்துக் கொண்டிருப்பார்கள். எனவே மனிதர்கள் த என்ற எழுத்திற்கு தத்த தானம் செய் என்ற பொருளை கற்பித்துக் கொண்டார்கள்.

கொடூரமாக நடந்து கொள்வதே அசுரர்களுடைய இயற்கை தன்மை. அதனால் அவர்கள் த என்ற எழுத்தை தயத்துவம் கருணை காட்டுங்கள் என்று சொல்லை கருத்தில் கொண்டே பிரம்மா தங்களுக்கு உபதேசித்திருக்கிறார் என்று நினைத்தார்கள்.

பிரஹதாரண்யக உபநிஷத்தில் வரும் இக்குறிப்பிட்ட பகுதிக்கு ஆதிசங்கரர் வியாக்கியானம் செய்யும் பொழுது தேவர்கள் மனிதர்கள் மற்றும் அசுரர்களை தனித்தனியாக இது குறிப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

மிகுதியான குணத்தோடு ஒருவன் இருந்தாலும் இன்பம் நுகர்தல் மற்றும் கர்வம் ஆகிய சுபாவங்களால் களங்கப்படுத்தப்பட்ட ஒரு மனிதனைத்தான் இங்கே தேவர்கள் என்ற சொல் குறிக்கிறது.

பயங்கரமான சுபாவத்தையுடைய கல்நெஞ்சுக்கார மனிதர்களை அசுரர்கள் ஆவார்கள். ஆகையால் புலனடக்கத்தையும் தானத்தையும் கருணையையும் எல்லா மனிதர்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும் இந்த என்ற உபதேசத்தை தான் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மா இடியோசை மூலமாக இன்றுவரை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு குரு தன் தகுதிக்கு ஏற்ப அவர்களுக்கு உபதேசத்தை அளிக்கிறார். ஒரே உபதேசத்தினால் வெவ்வேறு கருத்துகளை வெவ்வேறு சிஷ்யர்களின் மனங்களில் தோன்றச் செய்ய முடியும் என்பதற்கு பிரம்மா அளித்த உபதேசமே ஒரு சான்று.

Related articles

Recent articles

spot_img