கங்கையில் எப்படி குளித்தால் பாவம் போகும்? ஆச்சார்யாள் பதில்!

abinav vidhya theerthar 1 - 2026

சிஷ்யர்: கங்கை ஒருவனின் பாவங்களைப் போக்குகிறது என்று நம்பப்படுகிறது இது உண்மையாகவே அவ்வாறு ஆகிவிடுமா?

ஆச்சாரியாள்: ஆம் அதுபற்றி சந்தேகம் என்ன?

சிஷ்யர்: அப்படி ஒருவனின் பாபத்தைப் போக்கிவிடும் என்றால் எந்த பாவத்தை வேண்டுமானாலும் செய்து விட்டு அதற்குப் பிறகு கங்கையில் ஸ்நானம் செய்து கொள்ளலாமே..?

ஆச்சார்யாள்: கங்கையில் செய்த ஸ்நானம் அறியாமையால் செய்யப்பட்ட பாவங்களைப் போக்கிவிடும். மேலும் அறிந்து எப்போதாவது செய்யப்பட்ட எந்த பாவங்களுக்காக வருகிறோமோ அந்த பாவங்களையும் போக்கி விடும். கங்கையில் ஸ்நானம் செய்து பாவங்களை போக்கிக் கொள்வேன் என்ற எண்ணத்தோடு வேண்டுமென்றே செய்யப்பட்ட பாவங்களிலிருந்து கங்கை விடுதலை தருவாள் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை. இவ்வாறு கூறுவதில் இருந்து கங்கையின் மகிமையைப் பற்றி சற்றும் சந்தேகப்பட வேண்டாம்‌ கோடிக்கணக்கான மக்கள் வெகு தூரம் பிரயாணம் செய்து கங்கை என்னை புனிதமாக்குவாள் என்று தீவிரமான சிரத்தையுடன் செல்கிறார்கள். இறைவன் அவர்களுடைய சிரத்தையை வீண்ணாக்குவதற்கு விரும்பமாட்டான்.

இது சம்பந்தமாக ஒரு கதையும் சொல்லப்படுவதுண்டு. பார்வதி ஒரு சமயம் பரமசிவனிடம் எல்லோருடைய பாவங்களையும் கங்கை நீக்கி விடுவாளா என்று கேட்டாள். சிவன் பார்வதியை அழைத்துக்கொண்டு ஒரு கிழவர் வேடம் பூண்டு வந்து தான் ஆற்றில் முழுகுவதாக நடிப்பதாகவும் பார்வதி தன்னை காப்பாற்ற அங்கு போவோர் வருவோரை அழைக்குமாறும் கூறினார். மாறுவேடத்தில் இருந்த பார்வதியும் ஆற்றில் முழ்கியவாறு இருக்கும் தன் கணவரை காக்க யாரேனும் வருவார்களா என கூக்குரல் இட்டாள்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

மக்கள் அங்கு வந்தனர். அன்னை யார் பாவம் சிறிதுகூட செய்யவில்லையோ அவர்தான் என் கணவரை தொடலாம் என்று கூறினாள். எல்லோரும் தயங்க அங்கு வந்த ஒரு மனிதர் சற்றும் தயங்காமல் ஆற்றின் நீரில் நீந்திச் சென்று சிவனாகிய கிழவரை காப்பாற்றினார். அந்த மனிதரை நோக்கி உங்களுக்கு பாவங்களே இல்லையா என பார்வதி வினவ நான் உங்கள் கணவரை காப்பாற்றுவதற்கு முன் கங்கையில் மூழ்கி தானே சென்றேன். அப்பொழுதே என் பாவங்கள் போய்விட்டன என்று சொல்லிச் சென்றாராம். பரமசிவன் பார்வதியிடம் இவரை போன்ற சிரத்தை இருந்தால் பாவங்கள் எல்லாம் போய்விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்று பதிலுரைத்தார். கங்கையின் மகிமை அத்தகையது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories