Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்ஸனாதன தர்மத்தில் எவ்வித களங்கமும் ஏற்படுத்த முடியாது: ஆச்சார்யாள் அருளுரை!

ஸனாதன தர்மத்தில் எவ்வித களங்கமும் ஏற்படுத்த முடியாது: ஆச்சார்யாள் அருளுரை!

bharathi theerthar
bharathi theerthar

ஈஸ்வரன் ஒருவன்தான். அநேக ஈஸ்வரன்கள் எங்கு இருக்கிறார்கள்? ஒரே பகவான் அறிலும் தார்கிகள் ரொம்ப ஸ்பஷ்டமாக “தத்ரேஸ்வர ஸர்வக்ஞ பரமாத்மா ஏக ஏவ என்று சொல்வார்கள். ஈஸ்வர: பரமாத்மா, ஏக ஏவ ஒருவன்தான். ஒருவன்தான் என்று சொல்லி விட்டீர்கள். நாங்கள் கேட்ட கேள்விகுப் பதில் வரவில்லை.

இராமர், கிருஷ்ணர், சிவன், பெருமாள், சக்தி இங்குப் பதில்? இதற்கு பதிலா? ஒரே பகவான். அநேகமான பெயர்களையும் அதிகமான உருவங்களையும் ஏற்றுக்கொண்டான். அதற்கு சக்தி அவனுக்கு இருக்கிறது. நமக்கு இல்லை. நீங்கள் சொல்லலாம். எப்படி முடியும்? என்று கேட்கலாம்

உனக்கு முடியாததை வைத்துக்கொண்டு அவனுக்கும் முடியாது என்று சொல்லலாமா? உன்னுடைய சக்தி எவ்வளவு? அவனுடைய சக்தி எவ்வளவு? நாம் ஈஸ்வரனை அசிந்த்ய, அபரிமிதமான சக்தி உள்ளவன் என்று நாங்கள் தீர்மானமாகத் தெரிந்து கொண்டு இருக்கிறோம். அசிந்த்யம்=ஊகிக்கவும் முடியாது. அபரிமிதம்=அளவில்லாதது. நாம் ஊகிக்கவும் முடியாது. அவனுடைய சக்திக்கு அளவுமில்லை.

அப்பேர்ப்பட்ட சக்தி உள்ள ஈஸ்வரனுக்கு இப்படி ஏற்பட்ட ரூபங்களை எடுத்துக் கொள்வது சிரமமான காரியமா? இவ்வளவு விசித்ரமான ஜகத்தை அனாயாசமாக ஸ்ருஷ்டி செய்த பகவானுக்கு இந்த இராம, கிருஷ்ணாதி ரூபங்கள் எடுத்துக் கொள்வது ஒரு சிரமமா? ஒருவிதமான சிரமமுமில்லை.

இதுதான் உத்தேசித்து முன்னோர்கள் ஒரு ஸ்லோகத்தைச் சொன்னார்கள்

“ஏகஸ்ய கஸ்யசிது அஸேஷஜகத்ப்ரஸுதி ஹேதோஹு; அனாதி புருஷஸ்ய மஹாயி பூதேஹ் ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய ரூபவிபாத யோகாத் ப்ரம்மேதி, ஆஸ்ரயிட்டது விஷ்ணு ரிதி ருத்ரரிதி ப்ரதீதி:

ஏகஸ்ய-ஒரே பரமாத்மா. ஸகல ஜகத்துக்கு ருஷ்னாரா? காரணமான ஒரே பரமாத்மா ஸ்ருஷ்டி செய்யும் சக்தியையும் பரிபாலனம் செய்யும் சக்தியையும், ஸம்ஹாரம் செய்யக்கூடிய சக்தியையும் அடைந்திருக்கிறான்.

அந்தந்த சக்திகளை வைத்து ப்ரம்மா, என்றும் விஷ்ணு என்றும் ருத்ரன் என்றும் சொல்லப்படுகிறான். “ஏகஸ்ய: ஏவ ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய ரூப விபாத யோகாத் ப்ரம்மேதி, விஷ்ணுரிதி ருத்ர ரிதி ப்ரதீதி: என்று ஸ்பஷ்டமாகச் சொல்லி இருக்கும்போது நம்முடைய தர்மத்திலே அநேக தெய்வங்கள் என்று சொல்வது எங்கிருந்து வந்தது? அதனால் ஒரே பரமாத்மா.

அந்த பரமாத்மாவை எந்த பேத்திலே வேண்டுமானாலும் நீ உபாசனை பண்ணலாம். இராமர் கோவிலுக்குப் போனால் கிருஷ்ணருக்குக் கோபம் வருமா என்கிற கேள்வி அந்த இரண்டு பேரும் வெவ்வேறு என்று இருந்தால்தான் அந்தக் கேள்விக்கு அவகாசம்.

பின்பு எதற்காக என்று கேட்டால் உபாசகனுக்கு எந்த ரூபத்தில் ருசி இருக்கிறதோ அந்த ரூபத்தை அவன் உபாஸனை பண்ணலாம் என்று சாஸ்திரம் சொல்லியிருக்கிறது.

“ருசினாம் வைசித்ரியாருஜிகுடி நாமா பதனுஷாம் ருனாம் ஏகோ கம்யஸ்தவமஸுபயஸாம் அர்ணாவயிவ ருசினாம் வைசிதரிய”

ஒருவனுக்கு அந்த இராமர் என்ற உருவத்திலே இஷ்டம் இருக்கிறது. ஒருவனுக்குக் கிருஷ்ணன் என்பதில் இஷ்டம், ஒருவனுக்கு மீனாக்ஷி என்கிற அம்பாள் ரூபத்திலே இஷ்டம், அவனவனுடைய இஷ்டத்தைப் பொறுத்து அவன் அந்த உருவத்தை உபாஸனை பண்ணலாமே தவிர, வாஸ்தவமாக சைதன்யத்திலே எந்த விதமான பேதம் இல்லை.

இது ஸனாதன ஸித்தாந்தம். அது இன்னொரு இடத்திலேயும் பகவான் வந்து ஒரு சமயத்திலே ‘குரு” ரூபத்திலே ஒரு சமயத்திலே ஸ்த்ரீரூபத்திலே இருக்கலாமா என்று கேட்டால்
“த்வம் ஸ்த்ரீ த்வம் புமானஸி த்வம் குமாரபுதவா குமாரி த்வம் ஜீர்ணோ தண்டேன வன்சஸி த்வம் ஜாதோ பவஸி விஸ்வதோ ‘முக:”

என்று உபநிஷத்தில் சொல்லி இருக்கிறது.

அவன் ‘பூ’ ரூபத்தையும் எடுத்துக் கொள்ளலாம். ஸ்த்ரீ ரூபத்தையும் எடுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது ஈஸ்வரனுக்கு அசாத்யமானது எதுவுமில்லை. அவனுக்கு அசாத்யமானது எதுவுமில்லாததனால் அவனுக்கு முடியும். இந்த விஷயத்தை பகவானும் பகவத் கீதையிலே சொல்லும்போது,

अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं स्वामधिष्ठाय संभवाम्यात्म मायया

“அஜோபிஸம் நவ்யயாத்மா பூதானாம் ஈஸ்வரரோ பிஸம் ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவான் ஆத்மமாயயா”

என்று சொன்னார். அப்பேர்ப்பட்ட நிஷ்க்ருஷ்டமான தர்மமான நம்முடைய ஸனாதன தர்மத்திலே எந்த விதமான களங்கத்தையும் ஆபாதனை செய்வதற்கு யாராலும் சாத்தியமில்லை.

அப்படி ஆபாதனை செய்வது என்பது கேவலம். அத்யையினாலேயும் அல்லது இன்னொருவனை ஏமாற்ற வேண்டும் என்கிற பாவனையினாலேயும் யாராவது செய்யலாம்.

அப்படி எவனாவது களங்கத்தை அல்லது ஆக்ஷேபத்தைச் சொன்னால் அதற்கு நாம் மயங்கக்கூடாது.

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,079FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,956FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

இரயில் நிலையத்தில் இறந்து கிடந்த புஷ்பா பட நடிகை!

புஷ்பா படத்தின் 'ஏ சாமி' பாடலில் நடனமாடிய நடிகை ஜோதி ரெட்டி ரயில் நிலையத்தில்...

கண்டுபிடியுங்கள்.. கஸ்தூரி வைத்த போட்டி!

நடிகை கஸ்தூரி முதன்முறையாக தனது மகனின் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சின்னவர், அமைதிப்படை, இந்தியன் என...

Ak 61: தொடங்கியதா ஷூட்டிங்..?

அஜித் இரண்டாம் முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை என்ற படத்தில்...

நம்ப மாட்டோம்… இது நீங்க இல்ல… பெயிண்டிங்!

உங்க ஆத்துக்கார் அரண்மனை4 உங்கள வச்சி எடுக்கலாம் போலயே.. குண்டு குஷ்புதான் தமிழர்களின் ஃபேவரைட் ப்யூட்டி

Latest News : Read Now...