


ராஜபாளையம் ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் ராஜபாளையம் ஸ்ரீபூர்ண புஷ்கலாதேவி சமேத அச்சன்கோவில் தர்மசாஸ்தா சேவா சங்கம் கேரளாவில் வரும் ஆகஸ்ட் 4ல் நடைபெறும் நிறைவுத்தரிசி பூஜை விழாவுக்கு பூஜை செய்வதற்காக நெல் கதிர்கள் கேரளாவில் உள்ள முக்கிய கோவில்களில் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கேரளாவில் உள்ள கோவில்கள் அனைத்திலும் ஆடி மாதத்தில் நிறைபுத் தரிசி பூஜை விழா கொண்டாடப்படுகிறது.
கேரளாவில் ஆவணியில் நெல் அறுவடை சீசன் தூங்குவதற்கு முன்பாக ஆடியில் விளைந்த நெற்கதிர்களை அறுத்து கடவுளுக்கு படைக்கும் விழாவாக இந்த நிறைவுத்தரிசி பூஜையாக நடத்தி வருகின்றனர் மலையாளிகள்.


இந்த நாளில் வயலில் விளைந்த நெற்கதிர்களை முதலாவதாக அறுவடை செய்து கடவுள் முன் வைத்து பூஜித்து இந்த நெற்கதிர்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்த நிரைபுத்தரிசி பூஜை வழிபாடு கேரளாவில் சபரிமலை ,அச்சன்கோவில், குளத்துப்புழா, ஆரியங்காவு, பந்தளம் ,குருவாயூர் உட்பட அனைத்து கோவில்களிலும் விமர்சையாக நடைபெறும் .
இந்த நிகழ்வுக்கு கடந்த சில ஆண்டுகளாக ராஜபாளையத்தை சேர்ந்த ஸ்ரீபூர்ண புஷ்கலாதேவி சமேத அச்சன்கோவில் தர்மசாஸ்தா சேவா சங்கம்
ஐயப்ப பக்தர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ஆர்.நாகராஜன் தலைமையில் நெற்கதிர்களை கோவில்களுக்கு வழங்குகின்றனர்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 4ல் இல் நடைபெறும் இந்த நிரைபுத்தரிசி பூஜை விழாவுக்காக நெற்கதிர்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை இவர்கள் நடத்தி வருகின்றனர்.

நேற்று இன்று இருநாட்களாக ஐயப்பனின் படை வீடு கோவில்களான அச்சன்கோவில் ஆரியங்காவு குளத்துப்புழா பந்தளம் கோவில்களில் பக்தி பூர்வமாக வழங்கப்பட்டது.மேலும் கோரி அருகில் உள்ள கல்லீலிகாவு அப்பூப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி நெற்கதிர்கள் வழங்கப்பட்டது.புனலூர் கிருஷ்ணசாமி கோயில்,பந்தளம் கிருஷ்ணன் மற்றும் சிவன்கோயில் திருஆரண்முழா பார்த்தசாரதி கோயிலில் இந்த ஆண்டு நெற்கதிர்கள் வழங்கப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில் நாட்டில் முதுகெலும்பு விவசாயம் விவசாயம் செழிக்க மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வியாழக்கிழமை காலை 6மணிமுதல் 7மணி வரை நடத்தப்படும் நிறைபுத்தரிசி பூஜைக்காக நாங்கள் நெற்கதிர்கள் தனியாக பயிர் செய்து அறுவடை செய்து முக்கிய கோயில்களில் வழங்கியுள்ளோம் என்றார்.