
இன்று சனிப்பிரதோஷ நாளில், பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கு தேன் அபிஷேகம் நிவேதனம் செய்து வைத்து வணங்குங்கினால் சுபபலன்கள் பல கிடைக்கும்.வாழ்வில் துன்பங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம் என்கிறது சிவவழிபாடு.
கடவுளை நாம் மூன்று வகையாகப் பிரித்துப் பார்க்கிறோம். அதில் படைக்கும் கடவுள், காக்கும் கடவுள், அழிக்கும் கடவுள், இந்த அழிக்கும் கடவுளின் இடத்தை சிவபெருமானுக்கு கொடுத்திருக்கிறோம். அவர் மிகவும் கோபக்காரர் நெற்றிக் கண்ணாலே அனைவரையும் பொசுக்கி விடுவார் இப்படி சிவபெருமானை பற்றி எல்லோர் மனதிலும் ஒரு பயம் கலந்த பக்தியாகவே உருவகப்படுத்தி வைத்துக் கொண்டோம். உண்மையிலே அது முற்றிலும் தவறான ஒரு விஷயம். அழிக்கும் கடவுளாக அவர் இருப்பது என்னவோ உண்மை தான். ஆனால் அவர் அழிப்பது என்பது மனிதர்களை கிடையாது மனிதர்களின் தீய எண்ணங்கள், தீய செயல்கள், தீயவைகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அதை மட்டும் தான் அழிப்பாரே அன்றி தீயவை செய்யும் மனிதரைக் கூட திருத்தி வரம் தந்து வாழ வைக்கும் அற்புதமான தெய்வம் இந்த சிவபெருமான். அவருக்கு என்ன நெய்வேத்தியம் செய்து வைத்து வணங்கினால் அவரின் முழு அருளையும் ஆசீர்வாதத்தையும் நாம் பெறலாம் .
சிவபெருமானுக்கு மிக மிக உகந்த நாள் என்று சொன்னால் அது பிரதோஷம். வருடத்தில் ஒரே ஒரு சனி பிரதோஷத் தன்று விரதம் இருந்து வழிபட்டால் அந்த வருடம் முழுவதும் பிரதோஷ வழிபாடு இருந்ததற்கான பலனை அடையலாம். மூன்று சனிப் பிரதோஷத்திற்கு விரதம் இருந்தால் ஐந்து ஆண்டுகள் அவர்கள் விரதம் இருந்து வழிபட்டதற்கான பலனை சனி பிரதோஷம் கொடுக்கும்.இது ஒன்றே போதும் எத்தனை ஒரு அற்புதமான அருளை அவர் நமக்கு இப்படி இந்த விரதத்தின் வாயிலாக தந்திருக்கிறார் என்று.
சிவபெருமானுக்கு பொதுவாக அபிஷேகங்கள் மிகவும் பிடித்தமான ஒன்று. அது எந்த மாதிரியான ஒரு அபிஷேகம் என்றாலும் அதை அன்புடன் ஏற்றுக் கொள்வார். இவர் அலங்காரம், ஆடை ,ஆபரணம் இதற்கெல்லாம் ஆசைப்படுபவர் அல்ல, பெரிய பெரிய படையல்கள் விருந்துகள் இடத்திற்கெல்லாம் ஏங்குபவரும் அல்ல. மிக மிக எளிமையான ஒரு தெய்வம் என்றால் அது சிவபெருமான் மட்டுமே. உங்களால் இயன்ற எதை வைத்தாலும் மனதார ஏற்று கொள்வார். அத்தகைய ஒரு இளகிய மனம் கொண்ட கடவுள் இந்த சிவபெருமான்.
சரி என்ன தான் இத்தனை வகைகளில்ஸஅவரை வழிபட்டாலும் அவருக்கென்று படைக்க ஏதாவது ஒரு விசேஷமான பொருள் இருக்க தானே செய்யும். அப்படி ஒரு விசேஷமான பொருள் என்னவென்றால் தேன். சுத்தமான தேனானது அவருக்கு மிக மிக பிடித்தமான ஒன்று அந்த தேனை நீங்கள் அபிஷேகமாக செய்தாலும் சரி நெய்வேத்தியமாக படைத்தாலும் சரி தேனின் மிகச்சிறந்த குணமே எந்த காலத்திலும் கெடாது என்பதே.
அத்தகைய ஒரு சிறப்பு வாய்ந்த பொருள் தான் சிவபெருமானுக்கு மிக மிக பிடித்த நெய்வேத்திய பொருள். இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து நீங்கள் வணங்கி அவரை வேண்டினாலே போதும் நீங்கள் கேட்கும் வரங்களை எல்லாம் வாரி வழங்கும் தாராள குணம் படைத்த எம்பெருமான் சிவன் ஒருவரே.
இந்த சனிப்பிரதோஷ காலத்தில் அவருக்கு இந்த தேனை வாங்கி வைத்து வழிபட்டு அவரின் அருளையும், ஆசீர்வாதத்தையும் முழுமையாக பெற்று வாழ்க்கையில் வற்றாத செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் மிகப் பெரிய உன்னத நிலையை அடைந்து வாழலாம் என்கிறது சிவபுராணம்.
