மாசித் திருவிழா 7ம் நாளில் தங்க சப்பரத்தில் திருச்செந்தூர் முருகன்

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் உள்ளூர் செய்திகள் நெல்லை லைஃப் ஸ்டைல்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா ஏழாம் திருநாளான இன்று திங்கள்கிழமை மாலை,  சுவாமி ஆறுமுக நயினார் தங்க சப்பரத்தில் முன் புறம் வள்ளி, தெய்வானையுடனும், பின் புறம் நடராஜர் கோலத்திலும் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

thiruchendur 7thday1 - 2026

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றப் பட்டு நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் ஆறுமுக நயினார் ஒவ்வொரு அலங்காரத்தில் வந்து பக்தர்களுக்கு திருக்காட்சி நல்குகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.