கோடைவிடுமுறை -திருப்பதியில் பக்தர்களுக்கு கூடுதலாக குடிநீர், இலவச மோர், சிற்றுண்டி ஏற்ப்பாடு

thiruppathi - 2026

திருப்பதி ஏழுமலையானை கோடை விடுமுறையில் தரிசிக்க வரும் பக்தர்களுக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாசராஜு தலைமையில் அனைத்து தேவஸ்தான துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கோடை விடுமுறையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து , ஸ்ரீநிவாச ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோடை விடுமுறையையொட்டி, இம்மாதம் 15-ம் தேதி முதல், ஜூலை மாதம் 16-ம் தேதி வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோடைக்காலத்தில் நாடு முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருவார்கள் என்பதால், பிரதி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ஜூலை 16-ம் தேதி வரை, சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. விஐபி பக்தர்கள் அவர்கள் நேரடியாக வந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். மேலும் பக்தர்களுக்கு கூடுதலாக குடிநீர், இலவச மோர், சிற்றுண்டி, உணவு வசதிகள் செய்யப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்படுகிறது. உயர் ரக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடைபெறும்.
இந்த கோடைக்காலத்தில் தினமும் சுமார் 3.5 லட்சம் லட்டு பிரசாதங்கள் இருப்பில் இருக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாரத்திற்கு 1.27 லட்சம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் விநியோகம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.என இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories