November 30, 2021, 9:04 am
More

  கடையனுக்கும் அருளிய குரு: ஷீரடி சாய்பாபா (பகுதி 7)

  shirdi sai baba 4 - 1

  இறைவனின் அவதாரங்கள் எல்லாமே விசேஷமானதுதான் என்றாலும் பாபாவின் அவதாரம் மிகவும் விசேஷம் பெற்றதாகும். ராமர் கிருஷ்ணர் அவதாரங்களில் அவர்கள் பல இடங்களுக்கும் சென்றார்கள். அதேபோல ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர் போன்ற மகான்கள் பாரத தேசம் முழுவதும் பயணித்து பாரத மக்களுக்கு நன்மைகளைச் செய்தார்கள்.

  ஆனால் சாய்பாபா ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக சீரடியை விட்டு எங்கும் செல்லாமல் இருந்த இடத்தில் இருந்துகொண்டே பலரை தன் இருப்பிடத்திற்கு இழுத்து அருள்புரிந்து அவதார நோக்கத்தை நிறைவு செய்தார். இதனால் பாபாவின் அவதாரம் சிறப்பானதாய் போற்றப்படுகிறது.

  பக்தர்களின் கனவில் தோன்றியும் பல மகான்கள் மூலமாகவும் சில பக்தர்களுக்கு அவர்களின் குலதெய்வம் மூலமாகவும் தன்னை காட்டிக் கொண்டார். பலரின் வாழ்க்கையை மாற்றிய பாபாவின் வாழ்க்கை பலருக்கும் பாடமாக அமைந்தது ராவ்பகதூர்.

  ஹரி விநாயகர் என்பவரிடம் வேலை பார்த்த பிராமண சமையல் காரன் பெயர் மேகா என்பதாகும். இவர் சாஸ்திரங்களையும் புராணங்களையும் படித்தவர் இல்லை ஆனால் சிவன் மேல் மிகுந்த பற்றும் பக்தியும் கொண்டவர். வேறு தெய்வங்களை சிந்திக்கக்கூட மறுப்பவர் இத்தகைய வரின் முதலாளி சாய்பாபாவிடம் செல்லுமாறு பணித்தார்.

  மிகவும் மறுத்த நிலையில் வேறு வழியில்லாமல் செல்ல ஒப்புக் கொண்டான். வழியில் அவனை சந்தித்த சிலர் சீரடி சாய்பாபா முகமதியர் மூன்று வேளையும் சந்தியா வந்தனம் செய்யும் பிராமணனான நீ அவரை வழிபட செல்லலாமா என கேட்டு அவனை குழப்பத்தில் ஆழ்த்தினார்கள்.

  மேலும் ஹிந்து மதத்தில் இல்லாத மகான்களா? தெய்வங்களா? என கேட்கவே முதலாளியிடம் திரும்பி விட்டான். சிறிது நாட்கள் கழித்த பின் முதலாளி சீரடி புறப்படுமாறு கூறினார். அதற்கு மறுத்தான் மேகா நீ நினைப்பதுபோல் பாபா முகமதியர் அல்ல மூன்று தெய்வமும் அவ ரே முக்காலமும் உணர்ந்தவர் அவரே.

  உன் நன்மையின் பொருட்டே உன்னை அழைக்கிறார். மறுக்காதே என்று கூறி சீரடி யில் இருக்கும் தனது மாமா கணேஷ் தாமோதரை பாபாவிடம் அறிமுகப்படுத்துமாறு கடிதமும் கொடுத்து அனுப்பினார். முழுமனதுடன் இல்லாவிட்டாலும் சீரடி சென்றான். மேகா கண்ட பாபா கோபமாக பேசினார் உள்ளே வராதே என்றார்.

  அவனுக்கு என்ன பிராமணனுக்கு முகமதியரிடம் என்ன வேலை என்று கேட்டார். அதனால் பாபாவை சந்திக்காமல் சிறிது நாள் தங்கி ய பின் திரியம்பகேஸ்வரம் சென்றுவிட்டான்.

  திரியம்பகேஸ்வரத்தில் தங்கியபோது பாபாவின் நினைவு வந்து சென்றது. பலநாள் முயற்சித்தும் பாபாவின் நினைவே தொடர்ந்ததால் பாபாவை சந்திக்க சீரடி திரும்பினான். பாபாவின் அடியவர் பரிந்து பேசி பாபாவிடம் அனுமதி பெற்றார்.

  பக்குவமடைந்து திரும்பிய மேகாவை புன்னகையோடு வரவேற்றார் பாபா. கண்களாலேயே மன அமைதி கொள்ள வைத்தார் நயன தீட்சை பெற்ற மேகாவிற்கு அவன் கண்களையே நம்ப முடியவில்லை ஆம் அவன் எதிரில் பாபா இல்லாமல் பரமசிவன் அமர்ந்திருந்தார்.

  சத்தியத்தினை உணர்ந்தவனாய் பாபாவின் பாதங்களில் விழுந்து வணங்கினான். பின்னர் பாபாவின் சேவைக்கு தன்னை அர்ப்பணித்தவன். தினந்தோறும் பணிவிடைகள் செய்து பாபாவின் பாதங்களில் அபிஷேகம் செய்த தீர்த்தத்தை பருகினான். தான் வணங்கும் இறைவனான சாய் சிவனை விட்டு எங்கும் பிரிவதில்லை என்று சங்கல்பித்து கொண்டவனாய் மேகா சிவ பூஜைக்கு வேண்டிய வில்வ இலைகளை வெகுதூரம் சென்று பறித்து வந்து பாபாவிற்கு பூஜை செய்தான்.

  இருப்பினும் அதற்கு முன் இருந்த கண்டோபா கோயிலுக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டார் .அனைத்தும் அறிந்தவராக ஏற்றுக்கொண்டார் .ஒருநாள் ஏதோ காரணத்திற்காக கண்டோப கோயில் திறக்க வில்லை. இருந்தபோதும் தன் கடமையைச் செய்ய மசூதிக்கு வந்தான் மேகா உள்ளே வந்தவுடன் அவனிடம் நீ இப்போது கண்டோபா கோயிலுக்கு போய்விட்டு வா என்றார். பாபாவின் முன்பு மறுப்பு என்பதையே அறியாத மேகா கோயிலுக்கு வந்தால், என்ன ஆச்சரியம் தற்போது கோயில் திறந்திருந்தது

  பாபாவே சிவன் சிவனே பாபா என்ற நிலைப்பாட்டில் மேலும் உறுதி கொண்டவர் சிவனுக்கு பிடித்த கங்கை நீர் அபிஷேகம் செய்ய விரும்பினார் ஆனால் பலமுறை கேட்டும் பாபா ஒத்துக்கொள்ள வில்லை காரணம். மக்கள் சென்று வர பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த கோமதி நதி யை யே கங்கை என போற்றினார்கள் .

  மேகா அவ்வளவு தொலைவு சென்று வர வேண்டுமே என்று பக்தன் மேல் கொண்ட அன்பினால் பாபா மறுத்தார் ஆனால் மேகாவின் வற்புறுத்தல் அதிகரிக்கவே மகரசங்கராந்தி அன்று அபிஷேகத்திற்கு ஒப்புக்கொண்டார். மிகுந்த சிரமப்பட்டு பல குடங்களில் நீரை சேகரித்து விட்டான்.

  அபிஷேகம் ஆரம்பிக்கும்போது பாபா சொன்னார் மேகா எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் எனவே தலையில் மட்டும் ஊற்று என்றார். கூடியிருந்த மக்களின் ஆரவாரத்தோடு அபிஷேகம் தொடங்கியது. பாபாவிற்கு அபிஷேகம் செய்யும் ஆனந்தத்தில் மேகா நீரை உடலில் ஊற்ற என்ன ஆச்சரியம் துளி நீர் கூட உடலின் பகுதியை நனைக்கவில்லை தலையில் பட்டு சிதறின, பாபாவின் நிலையில் தங்களை மறந்தார்கள் .

  ஒருநாள் கனவில் தோன்றிய பாபா வாடாவில் வைத்து வணங்கும் தன் படத்திற்கு பின் திரிசூலம் ஒன்றை வரையுமாறு கூறி சில அச்சதைகளைகளை தூவியும் ஆசீர்வதித்தார். விழித்தெழுந்த மேகா அச்சதை இருப்பதை கண்டு ஆச்சரியம் கொண்டு பாபாவிடம் நேரில் விளக்கம் கேட்டான்.

  அதற்கு பாபா நான் பக்தனை காண வேண்டும் என்று நினைத்தாலும் காக்க வேண்டும் என்று நினைத்தாலும் எனக்கு எதுவும் தடையாக இருக்க முடியாது. எனக்கென்று தனி உருவமும் வடிவமும் கிடையாது எங்கும் எதிலும் தோன்ற முடியும் என்றார். நம்பிச் செயல்படும் எல்லோர்செயல் முன் நின்று நான் காப்பேன் என்று கூறினார்.

  பாபாவின் ஆணைப்படியே திரிசூலம் வரைந்தான். மறுநாள் சூலத்திற்கு ஏற்றதான ஒரு சிவலிங்கத்தை பூனாவைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் மூலம் கிடைக்கச் செய்தார் பல ஆண்டுகள் மன அமைதியுடன் வாழ்ந்த மேகா பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்தார்.

  ஒரு நல்ல நாளில் சிவபதவி அடைந்தார். அன்று மிகுந்த துக்கம் கொண்டவராய் இருந்ததோடு உடலுக்கு மலர் அஞ்சலியும் செய்தார். பின்னர் பக்தர்களிடம் அவன் உண்மையான பக்தன் என்றும் கூறிவிட்டு பத்தாம் நாள் தம் செலவில் பிராமண போஜனம் ஏற்பாடு செய்தார். தன்னை சந்திக்க கூட மறுத்தவனை வாழ்நாள் முழுவதும் தன்னுடனேயே வைத்துக் கொண்ட பாபாவின் செயல் ஆச்சரியமானது தானே.!

  • எழுத்து: குச்சனூர் தி. கோவிந்தராஜன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  369FollowersFollow
  46FollowersFollow
  74FollowersFollow
  1,756FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-