மார்ச்-8; மகளிர் தினத்தில் ஒரு பார்வை! வைணவ மகளிர்!

ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிகம் லைஃப் ஸ்டைல்

Andal Rengamannar - 2026

#இன்றுமார்ச்8உலகமகளிர்தினம்

நம் ஸம்ப்ரதாயத்திற்கு அடிகோலிட்ட பெண்கள் பலர். அவர்களில் என் சிந்தையில் உதித்தவர்கள் மூவர்.

  1. ஆண்டாள்:- பூமாலை சூடி பாமாலை பாடியவள். எங்கும் (லீலா விபூதி, நித்ய விபூதி) திருவருள் பெற திருப்பாவை எனும் அழகிய, எளிய, இனிய முப்பது பாசுரங்களில் வாழ்க்கைத் தத்துவங்களைக் கூறி அவனை அடையும் வழியை நமக்கு உணர்த்தியவள். பாமாலை சூட்டிய தேவிமார்களும் இல்லை. அதே போன்று தான் சூடிக் களைந்த பூமாலையை பெருமாளுக்கு சூட்டிய ஆழ்வார்களுமில்லை. மேலும் ஆழ்வார்கள் குழுவிலும் மற்றும் எம்பெருமான் பத்தினிமார்களிலும் ஒருவளாக விளங்குகிறாள். இவையே நம் கோதையின் தனிச்சிறப்பு.

  2. திருக்கோளூர்_பெண்பிள்ளை:-

    உய்ய வழியான உடையவரையே நமது ஸம்ப்ரதாய விஷயங்களை புராண, இதிஹாசங்களிலிருந்து மேற்கோளாக எடுத்து அசர வைத்து, பெண் இனத்திற்கே புகழ் சேர்த்தவள். இவளின் விசேஷ சுகமான ஸம்ப்ரதாய விஷய ஞானத்தைக் கண்டு பாஷ்யகாரரே அதிசயித்து உவகைக் கொண்டார்.

  3. குமுதவல்லி_நாச்சியார்:=

ஒவ்வொருவரின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பதற்கேற்ப தனது பர்த்தாவை பாகவத ததீயாராதனைக்கு வித்திட வைத்தவள். வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் பாகவத ததீயாராதனைம் என்பது தனிச்சிறப்பு கொண்டது. இதன்மூலம் திருமங்கை மன்னன் திருமங்கை ஆழ்வார் எனப் புகழ் பெற்றார். இத்தகைய அரிய செயல்களை புரிந்து ஸம்ப்ரதாயத்தில் இடம் பிடித்தவள்.
பெண்களால் தான் தர்மம் தழைத்தோங்கும் என்பதற்கேற்ப உன் மூவரின் வழி சென்று, அவர்கள் வழி நின்று வாழ்வினில் ஒளிர்வோம்.

” க்ருஹிணீ க்ருஹம் இதி உச்யதே” – என்பதால் பெண்களாலே வீடு என்ற ஒன்று இருக்கிறது …… மேலும் ” யத்ர நார்ய: பூஜ்யந்தே தத்ர ரமந்தே தேவதா: ” என்பதாக நம் ஸம்ப்ரதாயத்தில் பெண்களுக்கு உயர்ந்த ஸ்தானம் தரப்பட்டுள்ளது……

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.