மதுர மீனாட்சி கல்யாண வைபவமா…? வாரியார் சொல்லுற வாசகத்த கேளுங்க!

Published:

variyar swamigal - 2026

மீனாக்ஷி கல்யாணம் சொற்பொழிவு ஆற்றியபோது வாரியார் சொன்ன உதாரணம்…

உதாரணங்கள் சொல்வதில் வாரியார் சுவாமிக்கு இணை அவரே! அவர் மீனாக்ஷி கல்யாணம் சொற்பொழிவு ஆற்றியபோது சொன்னது:

“சிவபெருமான் மதுரைக்கு 9 மணிக்கு வரவேண்டும். திங்கட்கிழமை 9-10.30 முகூர்த்தம். பிரமன் 6 மணி முதலே அக்னி வளர்த்து மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார். மணி 8.55 ஆகிவிட்டது.

பெண்ணைப் பெற்ற காஞ்சனமாலை பதறுகிறார் மாப்பிள்ளை வரவில்லையே என்று. மணி 9. கைலாயத்தில் இறைவன் நந்திதேவரிடம்,”நந்தி! புறப்படலாமா” என்று கேட்கிறார்.

இங்கே மதுரை அரண்மனைக்கு ஒரு சேவகன் ஓடியே வந்து மாப்பிள்ளை மாசி வீதியில் வந்துகொண்டிருக்கிறார் என்றான்.

திரும்பிப்பார்த்தால் மணவறையில் பிரம்மதேவனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். 9 மணிக்குக் கயிலையில் புறப்பட்டார். அதே 9 மணிக்கு மதுரைக்கு வந்து சேர்ந்தார்.

எப்படி முடியும் என்று கேட்கலாம். உலகத்தில் சூரியன் 6 மணிக்கு உதிக்கும் என்றால் மெட்ராஸ்லயும், கோயமுத்தூர்லயும், மதுரையிலயும் 6 மணிக்குத் தான் உதிக்கும். மெட்ராஸ்ல காலை 6 மணிக்கு உதிக்க ஆரம்பித்து அரக்கோணம் காட்பாடி, ஜோலார்பேட்டை என்றா போகும்?

ALSO READ:  கல்வி அமைச்சரின் ராஜினாமா - மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

சூரியனே இப்படி என்றால் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தலைவனான எம்பெருமான் சிவபெருமான் 9 மணிக்குக் கிளம்பி அதே 9 மணிக்கு வருவது சாத்தியமான விஷயம்தான் என்றார்.

Related articles

Recent articles

spot_img