
பானிபூரி தின்ற 40 குழந்தைகளுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இது குறித்து ஹெச்ஆர்சியில் மனு அளிக்கப் பட்டுள்ளது.
தெலங்காணா மாநிலம் அதிலாபாத் நகரில் பானிபூரி தின்ற 40 சிறு குழந்தைகளின் உடல்நிலை கோளாறுக்கு ஆளாகி உள்ளது. இது குறித்து சிறுவர் உரிமை சங்கம் தீவிரமாக கண்டித்துள்ளது. மனித உரிமை சங்கத்திற்கு புகார் அளித்துள்ளது.
அதிலாபாத் நகரில் பானிபூரி தின்ற 40 பேர் உடல்நலக் குறைவுக்கு ஆளானார்கள்.

நாடு முழுவதும் லாக்டௌன் அமலில் இருக்கும்போது நகரில் பானி பூரியை எவ்வாறு விற்றார்கள் என்று அதிலாபாத் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இதற்கு முனிசிபல் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என்று சிறுவர் உரிமை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்கு பொறுப்பானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆணையிட வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு நல்ல விதமான சிகிச்சையை அரசாங்கச் செலவில் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து மனித உரிமை சங்கங்கள் மனு அளித்துள்ளன.
அதிலாபாதிலுள்ள குர்ஷித்நகர், சுந்தரையா நகர் காலனிகளைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் சாலையை ஒட்டியுள்ள ஒரு வண்டி மீது பானி பூரி வாங்கித் தின்றார்கள். வீட்டுக்குச் சென்றவுடன் மாலையிலிருந்து அவர்களுக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஆரம்பித்தன. ஃபுட் பாய்சன் ஆனதால் ஒருவர் பின் ஒருவராக மொத்தம் 40 குழந்தைகள் ரிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அவர்களுக்கு உயிருக்கு அபாயம் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தார்கள்.

கரோனா தடுப்பிற்காக லாக்டௌன் விதித்துள்ள நிலையில் அதிலாபாத் நட்டநடு நகரில் கலப்படம் மிகுந்த தின்பண்டங்களை விற்பதற்கு அனுமதி எவ்வாறு அளித்தார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.
தெலங்காணாவில் நடந்த அதிலாபாத் பானி பூரி சம்பவம் பின்னணியில் ஆந்திர பிரதேஷ் அரசு எச்சரிக்கை அடைந்து உள்ளது. ஆந்திராவில் பானிபூரி விற்பனைக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.