மகாராஷ்டிரத்தில் துவம்சம் செய்யும் வெட்டுக்கிளிகள்! தெலங்கானாவுக்கும் ஆபத்து!

Published:

vettukkili
vettukkili
  • மகாராஷ்டிராவை வந்தடைந்த வெட்டுக்கிளிகளின் கும்பல்.
  • தெலங்காணாவுக்கு ஆபத்து.

ஒருபுறம் கரோனா தொற்று நோய் பரவலால் நாடு முழுவதும் தத்தளித்து வருகையில்… மறுபுறம் வெட்டுக்கிளிகளின் கும்பலும் கவலையளிக்கிறது.

பயிர் பச்சைகளை அழித்து வரும் வெட்டுக்கிளிகள் தானியப் பயிர்களையும் நாசம் செய்து விவசாயிகளுக்கு நஷ்டம் விளைவித்து வருகின்றன.

தற்போது மகாராஷ்டிராவில் இருந்து வெட்டுக்கிளிகளின் கூட்டம் தெலங்காணாவுக்கு படையெடுக்கும் ஆபத்து இருப்பதாக மாநில விவசாயத் துறை எச்சரிக்கை அடைந்து உள்ளது.

இந்த பின்னணியில் செவ்வாய்க்கிழமை இரவு விவசாயத்துறை காரியதரிசி பி ஜனார்தன் ரெட்டி உயர் அதிகாரிகளின் கூட்டம் ஏற்பாடு செய்தார். அத்தருணத்தில் அவர் பேசுகையில் மகாராஷ்டிராவில் உள்ள அமராவதி பிராந்தியத்தில் வெட்டுக்கிளிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்தி உள்ளதாக அங்கு அதிகாரிகள் தெரிவித்தார்கள் என்றார்.

vettukkili
vettukkili

ஒருவேளை அங்கு வெட்டுக்கிளிகளை கண்ட்ரோல் செய்யாவிட்டால் தெலங்காணாவுக்குஆபத்து உள்ளது என்று எச்சரித்தார். இந்த பின்னணியில் மகாராஷ்டிரா எல்லையில் உள்ள மாவட்டங்களான அதிலாபாத் அஸபாபாத், மன்சிர்யால, நிஜாமாபாத், காமாரெட்டி, பூபால பல்லி, நிர்மல் நகரங்களில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மாவட்ட அளவில் கமிட்டிகள் ஏற்பாடு செய்து அது தொடர்பான அதிகாரிகளோடு கூட்டங்கள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

வெட்டுக்கிளிகளின் கூட்டம் 12லிருந்து 15 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும் அவை மரங்களின் மீது அமர்ந்துகொண்டு பயிர் பச்சைகளுக்கு மிகப்பெரும் அளவில் நஷ்டம் ஏற்படுத்தும் என்றும் கூறினார். வெட்டுக்கிளிகள் கூண்டோடும் கூட்டத்தோடும் அழிக்கும் அம்சம் பற்றி விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றார்.

வெட்டுக்கிளிகளின் கூட்டம் வடக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து பாகிஸ்தான் வழியாக ராஜஸ்தான் உத்தரபிரதேசம் மத்திய பிரதேசம் மஹாராஷ்டிராவிற்கு பரவி உள்ளன என்றார். அவற்றில் குஞ்சுகளின் உற்பத்தி அதிக அளவில் இருக்கும் என்றும் ஒரு வெட்டுக்கிளி அதன் எடைக்கு சமமான ஆகாரம் உண்ணும் என்றும் கூறினார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img