
சீன வைரஸான கொரோனா தொற்று காரணமாக பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு 23 வயதாகும் போது ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோதி அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்று காரணமாக பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு, குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து நிதி உதவி செய்யப்படும்.
அந்தக் குழந்தைகள் 18 வயதாகும் போது மாதந்தோறும் நிதியுதவி வழங்கப் படுவதுடன், 23 வயதாகும் போது ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி பிஎம் கேர்ஸ் – ல் இருந்து வழங்கப்படும். மேலும், அவர்களது உயர் கல்விக்கு கடன் பெற வழி செய்து கொடுப்பதுடன், அதற்கான வட்டியை பிஎம் கேர்ஸில் இருந்து அரசே செலுத்தும்…. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Modi govt stands firmly with children who lost their parents to #Covid19. They will get a monthly stipend once they turn 18yrs & ₹10 lakhs when they turn 23yrs from #PMCares. They will also be assisted to get loans for higher education & #PMCares will pay interest on the loan.