madurai

கொரோணா தொற்று நோய் பரவுதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு நான்காவது முறையாக உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களும் மற்றும் அரசு பணியாளர்கள் தனியார் நிறுவனங்களும் கடைபிடித்து வருகின்றனர். தற்போது கல்வித்துறை உட்பட அரசு அலுவலகங்கள் சுழற்சி முறையில் பணியாளர்கள் வேலை செய்வதற்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

ஒரு சில அதிகாரிகள் கீழே வேலை பார்ப்பவர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு அலுவலகப் பணிக்கு சம்பந்தமில்லாத பள்ளி மற்றும் மையத்தில் வேலை செய்பவர்களை அலுவலகப் பணிக்கு வருமாறு வாய்மொழி உத்தரவு கூறியதாக தெரிகிறது தற்போது ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது இதனால் மதுரை போன்ற பெரு நகரங்களில் வேலை பார்க்கக் கூடிய வங்கி மற்றும் அலுவலகங்களில் தங்களது ஊர்களில் இருந்து வருவதற்கு முடியாதவர்களை அங்குள்ள அவரவர் சார்ந்த அலுவலகங்களில் வேலை செய்யும்படி உத்தரவிட்டுள்ளனர்

இதன்பேரில் அவரவர் சொந்த ஊரில் உள்ள அவர்கள் சார்ந்த அலுவலர்களின் பணி புரிந்து வந்தனர் இப்படி உள்ள நிலையில் அலுவலகம் சாராத பணியில் இருக்கக் கூடியவர்களில் போக்குவரத்து இல்லாத நிலையில் அவர்களை அலுவலகத்துக்கு சுழற்சிமுறையில் வரக் கூறியதாக தெரிகிறது அலுவலகம் சாராத பணியாளர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக பட்டுள்ளதாக தெரிகிறது. மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து இதுபோல் அத்துமீறி உத்தரவிடும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும்படி பெற்றோர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

இதுகுறித்து சமூக ஆர்வலர் துரைப்பாண்டி கூறியபோது கல்வித்துறை சார்ந்த அமைச்சரே பத்தாம் வகுப்புத் தேர்வு ஜூன் 1 முதல் நடக்கும் என்று கூறினார் பெற்றோர்களுடைய வேண்டுகோளை ஏற்று ஜூன் 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும் என்று கூறியுள்ளார் கொரோணா வைரஸ் நோயால் அனைவருமே பல இன்னல்களுக்கு பாதிக்கப்பட்டு வருகிறோம்

இந்நிலையில் சில அரசு அதிகாரிகள் பள்ளி அதனைச் சார்ந்த பள்ளிகளில் பணிபுரிய கூடியவர்களை வாடிப்பட்டி அலுவலகத்துக்கு வரச் சொன்னதாக தெரிகிறது வாகனப் போக்குவரத்தில் இல்லாத நேரத்திலும் ஆட்டோ கட்டணம் ரூபாய் 200 கொடுத்து செல்லக்கூடிய அவல நிலையில் உள்ளனர்

தொற்றுநோய் அபாயம் உள்ள நிலையில் தேவையற்ற உத்தரவால் ஆசிரியர்கள் மன வேதனையில் உள்ளனர் கல்வித் துறையை சேர்ந்த அதிகாரிகள் இதுபோல் தேவையற்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

  • செய்திக் கட்டுரை: ரவிசந்திரன், மதுரை
ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending