“ஒரே அச்சாக இல்லாமல் பல தினுசுகளில் அருள் லீலை வைத்தியம்.” கட்டுரை-ரா கணபதி.. தட்டச்சு-வரகூரான் நாராயணன். வைத்யநாதனாக அவர் செய்துள்ள அருள் லீலைகள் அனந்தம். அதுவும் ஒரே அச்சாக இல்லாமல் பல தினுசுகளில் செய்திருக்கிறார்.கவியுள்ள அருளாளர். ஆயுர்வேத ரீதியிலேயே மருந்து சொலவது; அதிலும் மாறுபட்ட அழகோடு. கபத்தொல்லை என்று முறையிடும் இரு பக்தர்களில் ஒருவருக்குத் தேன் போட்டுத் துளசி கஷாயம். மற்றவர்க்கு அரிசித் திப்பிலியுடன் ஆடா தொடைக் கஷாயம் என்று சொல்வது; ஆபரேஷன் செய்தேயாக வேண்டும் என்னும் ஆபத்துக் கட்டத்திலிருப்பவருக்கு லேசாக ஒரு ‘வேண்டாம்’ சொல்லியே மாயமாய்குணப்படுத்துவது இன்னொருவருக்கு ஏதோ வழிபாடு,ஹோமம் என்று விதிப்பது; மருத்துவ சிகித்சையையே தொடரச் செய்து, அதுநாள் வரை பலிக்காத மருந்துகளே அதற்குப்பின் அதிவிரைவுடன் சொஸ்தப் படுத்துமாறு செய்வது-என்றிப்படிப் பல தினுசு. சில நோயாளிகளிடமோ, “எனக்கும் ஒடம்பு ஸரியாயில்லை”என்று கூறிநிறுத்திக்கொள்வார்.அநேகமாக அவர்கள் அந்தநோயுடனேயே, ஆனாலும் அது முற்றி ஆயுளுக்குக் குந்தகம் விளைவிக்காமல் காலம் தள்ளுமாறு இருக்கும். அகக் கண்னை திறந்து வைப்பவரே குருநாதர். நம் குருநாதன் புறக் கண்ணை குணப்படுத்திய ஒரு நிகழ்ச்சி பார்ப்போம். பாணியம் ஸிமென்ட்ஸைச் சேர்ந்த ப்ரஸாத ராவ் ஒரு நல்ல பக்தர். அவருடைய குழந்தைக்குப் பிறந்த நாள். தொட்டுக் கண்ணிலிருந்து நீர் வந்து கொண்டேயிருந்தது. எத்தனை வைத்தியம் செய்தும் பயனில்லை.குழந்தையை அழைத்து வந்து பெரியவாளிடம் காட்டினார். அருள் நயனம் குழந்தையைப் பார்த்தது. குழந்தையின் கண்களும் பெரியவாளைப் பார்த்தன. ஆம், பார்க்கவே செய்தன, நீர்த்திரையின் இடையீடில்லாமல்.!. வற்றாத ஊற்றாக அன்றுவரை பெருகிக் கொண்டிருந்த தாரைஅநுக்ரஹ தாரையின் அநாயாஸ ஆற்றலில் கையால் பிடித்து நிறுத்தினாற்போல் நின்று விட்டது!. குழந்தையின் ஓயாக் கண்ணீரைக் கண்டு தாங்களும் கண்ணீர்சிந்திக் கொண்டிருந்த பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்
“ஒரே அச்சாக இல்லாமல் பல தினுசுகளில் அருள் லீலை வைத்தியம்.”
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari