December 6, 2025, 12:18 PM
29 C
Chennai

“ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் “-பிஷப்

“ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் “-பிஷப் (முதல்பரிசை தட்டிச் சென்ற பெரியவா)
 
நடித்தாரே! நாடகம் தனில் அவர் நடித்தாரே!18813893 1581142901930869 4760401120981345078 n - 2025
உலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தாரே!
என்று பல்லவியும், சரணமாக
கடவுள் கொடுத்தது மானிட வேடம்!
கல்விக்கூடத்தில் ‘கிங் ஜான்’ வேடம்!
இன்றிவர் படித்தது இங்கிலீஷ் பாடம்!
எதிர்பார்த்திருக்குது காமகோடி பீடம்!
 
.அந்த சுவாமிநாதனே காஞ்சி காமகோடி 68வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகளாகி நமக்கு அருள்பாலித்தார்.-சுப்பு ஆறுமுகம்
 
சுவாமிநாதன் எட்டுவயது வரை தந்தையிடமே கல்வி கற்றார். பின் திண்டிவனம் ஆற்காடு அமெரிக்க மிஷன் உயர் நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்தார். இப்பள்ளியில் கண்டிப்பும் ஒழுங்கும் நல்ல முறையில் இருந்தன. அறிவுக்கூர்மையுடன் நன்கு ஆர்வத்துடன் படித்து வந்தார். ஆண்டு தோறும் பைபிள் ஒப்புவித்தல் போட்டி நடப்பது வழக்கம். இப்போட்டியில் எப்படியும் பரிசு பெற்று விடுவது என்ற உறுதியுடன் சுவாமிநாதன் படித்து முதல்பரிசும் பெற்றார்.இவர் வெற்றி பெற்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்தது. எல்லா ஆசிரியர்களும் சுவாமிநாதனைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
 
ஒருசமயம் அப்பள்ளியை ஆய்வு செய்ய உதவிக்கல்வி அதிகாரி மஞ்சக்குப்பம் சிங்காரவேலு முதலியார் வந்திருந்தார். கண்டிப்பு மிக்க அவர், மாணவர்களின் கல்வித்திறனை அறிய சிக்கலான பல கேள்விகளைக் கேட்டார். சுவாமிநாதனின் தெளிவான பேச்சு அதிகாரியின் கவனத்தை ஈர்த்தது. நிச்சயம் இந்த மாணவர் எதிர்காலத்தில் உயர்ந்தநிலையை அடைவார் என்று பாராட்டிச் சென்றார்.
 
சுவாமிநாதன் அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியின் ஆண்டு விழாவில் ஷேக்ஸ்பியர் எழுதிய ஜான்மன்னர் என்ற நாடகத்தை நடத்த பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. நாடகத்தின் முக்கிய கதாபாத்திரமான ஆர்தர் இளவரசர் வேடத்தில் நடிப்பதற்கு சுவாமிநாதனைத் தேர்ந்தெடுத்தார்
 
தலைமையாசிரியர். நாடகத்தில் நடிப்பதற்கு தன்னைத் தேர்ந்தெடுத்ததை அறிந்து சுவாமி நாதன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சுவாமிநாதனின் பெற்றோருக்கோ இதில் உடன்பாடில்லை. ஆனாலும், தன் பெற்றோரைச் சம்மதிக்க வைத்தார் சுவாமிநாதன். அவரது விருப்பப்படியே பெற்றோர் நாடகஉடைகளை தைக்க ஏற்பாடு செய்தனர். இரண்டே நாட்களில் ஜான் மன்னருக்குரிய வசனங்களை மனப்பாடம் செய்து, அருமையாக நடித்தார். நாடகத்தைக் கண்ட தலைமை விருந்தினர் பிஷப், சுவாமிநாதனைப் பாராட்டி மகிழ்ந்தார். இன்று ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் என்று சொல்லி முதல்பரிசை வழங்கினார். அந்த சுவாமிநாதனே காஞ்சி காமகோடி 68வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகளாகி நமக்கு அருள்பாலித்தார்.
 
மெம்பர்களுக்கு ஒரு போனஸ்–சுப்பு ஆறுமுகம் எழுதிய இரு கவிதைகள்
 
(தாலாட்டுப் பாடல்-பெரியவா மீது)
 
ஓங்காரம் குழந்தை என்றே உன்னுருவில் வந்ததுவோ!
 
ஆங்கார சக்தியதே ஆசிமொழி தந்தனளோ!
 
காமதேனு பாலூட்ட கலைமகளே தாலாட்ட
 
ஆகமங்கள் சீராட்ட அன்னையின் கை தொட்டில் ஆட்ட
 
காமாட்சி காதில் வந்து கதைகள் ரசிக்கச் சொல்லினளோ!
 
கலகல சிரிப்பினில் அன்னை கானமழை பொழிந்தனளோ!
 
உதைக்கும் பாதங்களை உலகமே வணங்குமல்லோ!
 
காத்திருக்கும் நாளை அல்லோ காமகோடி பீடமல்லோ!
 
அனுஷம் நட்சத்திரமோ! அவதாரம் சரித்திரமோ!
 
ஆடல் அரசன் – திரு ஆடல்களில் நீயும்ஒன்றோ!
 
ஆதி சங்கரர் அருளின் சேதியென்ன கொணர்ந்தாயோ!
 
ஆராரோ! ஆரிரரோ! ஆரிரரோ! ஆராரோ!
 
தட்சிணா மூர்த்தியோ! சனாதனக் கீர்த்தியோ!
 
தருமத்தின் குறைகள் கண்டு தான் எடுத்த அவதாரமோ!
 
ஆராரோ! ஆரிரரோ! ஆரிரரோ! ஆராரோ!”
 
இப்படியாக குழந்தை சுவாமி நாதன் (மஹா பெரியவாளின் பூர்வாசிரமப் பெயர்) தொட்டிலில் துயில் கொள்ளும் அழகுக்கு ஒரு தாலாட்டுப் பாட்டுப் போட்டிருந்தேன். இதைக் கேட்டதும், மஹா பெரியவாள், என்னைத் தொட்டிலில் போட்டு, தாலாட் டுப் பாடி தூங்கப் பண்ணிட்டியே! ” என்று சொல்லிச் சிரித்தார்.
 
பெரியவாளின் பால பருவத்தைப் பற்றிச் சொல்லும்போது,
 
நடித்தாரே! நாடகம் தனில் அவர் நடித்தாரே!
 
உலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தாரே!
 
என்று பல்லவியும், சரணமாக
 
கடவுள் கொடுத்தது மானிட வேடம்!
 
கல்விக்கூடத்தில் ‘கிங் ஜான்’ வேடம்!
 
இன்றிவர் படித்தது இங்கிலீஷ் பாடம்!
 
எதிர்பார்த்திருக்குது காமகோடி பீடம்!
 
என்று சொன்னேன். உடனே மஹா பெரியவா, இதெல்லாம் நோக்கு எங்க கெடச்சுது?” என்று கேட்டார். பெரியவா பத்தின புஸ்தகத்தை படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்” என்று சொன்னேன்.-சுப்பு ஆறுமுகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories