December 6, 2025, 5:33 AM
24.9 C
Chennai

ருஷி வாக்கியம் (47) – தர்ம வாழ்க்கையில் சுதந்திரம் பறிபோகிறதா?

kasi1 - 2025
நாம் தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று முயற்சித்தாலும் ஓரொரு தடவை தர்மத்தைக் கடைபிடிப்பது மிகவும் சிரமமாகத் தோன்றுகிறது. அது மட்டுமல்ல. நம் சுதந்திரத்திற்கு அது தடை போல் கூடத் தோன்றும். அப்போது தர்மத்தை விட்டு விட்டால் ஹாய்யாக இருக்கும் என்று தோன்றும்.

கட்டுப்பாட்டுக்குள் நம்மை அடக்கி வைத்தாற்போல் தோன்றினாலும், சுதந்திரத்திற்குத் தடை ஏற்பட்டாற்போல் தோன்றினாலும் தர்மத்துக்கு கட்டுப்பட்டு இருப்பதில் உள்ள ஆனந்தம் மிகவும் உயர்ந்தது என்று சாஸ்திரம் கூறுகிறது.
தர்மத்தில் கட்டுப்பட்டிருப்பதற்கு ஒரு பெயர் வைத்துள்ளது சாஸ்திரம். அதன் பெயர் ‘த்ருதி’. ‘த்ருதி’ என்றால் உறுதி என்று பொருள். தர்மத்தை உறுதியாக கடைபிடித்தால் ஏற்படும் திருப்தியின் பெயர் சந்தோஷம். உண்மையான சந்தோஷம் என்றால் அதுதான். உறுதியாக இருக்க முடிவதால் கிடைக்கும் ஆனந்தத்தின் பெயர் சந்தோஷம். எதில் உறுதி? தர்மத்தில் உறுதி.

பவபூதி தன் காவியத்தில் ஒரு வாக்கியம் கூறுகிறார். “எப்போதுமே அனுஷ்டானத்தில் இருப்பதால் சுதந்திரம் பறி போகிறது!” என்கிறார்.

இதன் பொருள் என்ன என்று பார்ப்போம். மனு சரித்திரத்தில் ‘அல்லசானி பெத்தன்னா’ அற்புதமான கதை ஒன்று கூறுகிறார். இந்தக் கதை மார்க்கண்டேய புராணத்திலிருந்து எடுக்கப்பட்டது.

அது ப்ரவரன் என்பவனின் வரலாறு. ப்ரவரன் தர்மத்தை கடைபிடித்து வாழ்ந்து வருகிறான். இல்லற தர்மத்தைக் கடைபிடிப்பதில் சிறந்த ஆதர்ச மனிதனாக விளங்கினான். தினமும் காலையில் எழுந்து செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவது, அதிதிகளை வரவேற்று உணவளிப்பது, அக்னிஹோத்திறத்தைச் சேவித்துக் கொள்வது, சாஸ்திர அத்யயனம் செய்வது… இவ்வாறு வாழ்ந்து வருகிறான்.
அவனுக்கு ஒரு கோரிக்கை இருந்தது. அநேக க்ஷேத்திரங்களை தரிசிக்க வேண்டும், அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் நித்திய அனுஷ்டானத்தில் ஈடுபட்டு வந்ததால் க்ஷேத்ராடனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கோரிக்கையாகவே இருந்து விட்டது. சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு அவனக்குக் கிடைக்கவில்லை. ஒருவேளை வாய்ப்பு கிடைத்தாலும் அதை அவன் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஏனென்றால் அவன் செய்ய வேண்டிய நித்திய அனுஷ்டானத்திற்கு பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாதே என்பதால் எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்துகொண்டு தர்மத்தை கடைபிடித்து அதிதிகளை ஆதரித்து வந்தான். அதன் மூலம் அவன் எதையாவது இழந்துவிட்டானா? தலங்களை தரிசிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்திருக்கலாமே தவிர அவனுடைய தருமம் அவனைக் காப்பாற்றும் இல்லையா?

அவனை அவனுடைய தர்மம் எவ்வாறு காப்பாற்றியது என்பதைப் பார்ப்போம். ஒருமுறை அவன் வீட்டிற்கு ஒரு யோகி வந்தார். அந்த யோகி பல இடங்களைப் பார்த்து சஞ்சரித்து வந்த சித்த புருஷர். ப்ரவரன் அந்த யோகியை வரவேற்று விருந்தளித்தான். ஏனென்றால் இல்லறம் என்று ஒன்று இருந்தால் வீட்டுக்கு வந்த விருந்தினர்களை வரவேற்று ஆதரிக்க வேண்டும் என்பது தர்மம். அதேபோல அந்த யோகிக்கும் உணவளித்து உபசாரம் செய்தான். ஓய்வு நேரத்தில் அந்த யோகியிடம் கேட்டான், “நீங்கள் சுற்றிப் பார்த்து வந்த இடங்களின் சிறப்புகளை எனக்குக் கொஞ்சம் கூறுங்களேன்!” என்றான்.

அவர் சொல்ல ஆரம்பித்தார். வடக்கே இமயம் முதற் கொண்டு தெற்கே மகாசமுத்திரம் வரை இருக்கும் அபூர்வமான தலங்களைப் பற்றியும் அவற்றின் மகத்துவம் பற்றியும் விவரமாகக் கூறினார்.

“இவை அனைத்தையும் நீங்கள் உண்மையிலேயே பார்த்தீர்களா?” என்று கேட்டான் ப்ரவரன்.

“ஆமாம். நேரில் அவற்றைக் கண்ணாரக் கண்டேன். அங்கெல்லாம் பல காலம் தங்கி இருந்தேன்” என்றார் யோகி.

“உங்கள் வயதைப் பார்த்தால் இளையவராக இருக்கிறீர். அத்தனை இடங்களை எவ்வாறு தரிசிக்க முடிந்தது?” என்று கேட்டான்.

“நான் சஞ்சாரம் செய்யும் காலத்தில் ஒரு முறை ஒரு சித்த புருஷர் தரிசனமளித்தார். அவர் எனக்கு மை ஒன்று கொடுத்தார். அதனைக் காலில் பூசிக்கொண்டால் எங்கு போகவேண்டும் என்று நினைத்தாலும் அங்கு சென்று விடலாம். அதன் மூலம் நான் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தேன்” என்றார்.

ப்ரவரனுக்கு இமயமலையைப் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. ஆனால் அனுஷ்டானத்தை விட்டு விட்டுச் செல்லவும் முடியவில்லை. “உங்களுக்கு என் மீது தயை இருந்தால் அந்த மையை எனக்கு அளிப்பீர்களா?” என்று கேட்டான்.

“சரி. நீ அதற்கு உகந்தவனே!” என்று கூறி அவனுக்கு அந்த மையை அளித்தார் யோகி.

பின்னர் அந்த யோகி சென்றதும், ஒரு நாள் ஓய்வு நேரம் பார்த்து காலுக்கு அந்த மையைப் பூசிக் கொண்டு இமயமலைப் பிரதேசத்தை சென்றடைந்தான். அங்கு பல இடங்களையும் சுற்றிப் பார்த்து ஆனந்தப் பரவசத்தில் ஆழ்ந்திருந்தான். மாலை வேளை வந்ததும் சந்தியா உபாசனைக்கு நேரமாகிறதே என்றுணர்ந்து, வீட்டுக்கு செல்ல சங்கல்பம் செய்து கொண்டாலும் அவனால் வீட்டுக்குச் செல்ல இயலவில்லை.

ஏனென்றால் காலில் பூசிக்கொண்ட மை இமயமலைப் பனியில் கரைந்து போய்விட்டது. அங்கேயே இருந்து விட வேண்டி வந்ததால் மிகவும் வருத்தமடைந்தான். என்ன செய்வதென்று தெரியவில்லை அவனுடைய கவலை என்னவென்றால் தான் கடைபிடித்து வந்த நித்திய அனுஷ்டானத்திற்குத் தடை வந்துவிடுமே என்பதே!
kasi2 - 2025
அவ்வாறு அங்கு அலைந்து வருகையில் வழியில் ஒரு கந்தர்வப் பெண் தென்பட்டாள். அவனுடைய உடலழகால் கவரப்பட்டு அவளை விவாகம் செய்து கொள்ளும்படியும் அவளோடு சேர்ந்து ஆனந்தமாக இருக்கும்படியும் பிரார்த்தித்தாள். ஆனால் தர்மத்தில் உறுதியானவனாகவும் ஏகபத்தினி விரதனாகவும் இருந்த ப்ரவரன் அவளை, “விலகிச் செல்!” என்றான்.

“என்னை ஆனந்தமடையச் செய்தால் கண நேரத்தில் உன்னை உன் வீட்டில் இருக்கும்படிச் செய்வேன்” என்றாள்.

“அதர்மத்தின் வழியே வரும் சௌகர்யம் எனக்குத் தேவையில்லை!” என்று கூறிவிட்டு இந்திரியக் கட்டுப்பாட்டில் இருந்து விலகாமல் ஜிதேந்திரியனாக அங்கிருந்து நடந்து சென்று கங்கை நதியில் ஸ்நானம் செய்தான்.

மனதால் அக்னி தேவனை தியானம் செய்து, “நான் நித்திய பூஜை செய்யும் அக்னி தேவன் எனக்கு அருள் புரியட்டும்!” என்று பிரார்த்தனை செய்தான். அந்தப் பிரார்த்தனைக்கு மகிழ்ந்த அக்னிதேவன் ஒரு கணநேரத்தில் பிரவரனை அவனுடைய வீட்டில் இருக்கச் செய்தான்.

இந்தக் கதை மூலம் ருஷி நமக்கு என்ன கூற வருகிறார்? “நீ தர்ம அனுஷ்டானம் செய்வதில் நிஷ்டையோடு இருந்தால் அது சிதறாமல் இருக்க வேண்டும் என்ற உறுதியோடு இருந்தால் அந்த தர்மமே உன்னைக் காப்பாற்றும். அந்த தர்மம் உனக்கு திருப்தி அளிக்கும். வெளி உலயுலகிலிருந்து பெற முடியாத அற்புதங்களை தர்மத்தில் நிஷ்டையோடு இருப்பவன் பகவானின் கிருபையால் பெறுகிறான்”. இது இக்கதை கூறும் சிறப்பான அம்சம்.

“நான் வழி காட்டுகிறேன். உன் வீட்டில் இறக்கி விடுகிறேன்” என்று கந்தர்வப் பெண் கூறினாலும், “தேவையில்லை” என்று மறுத்தவனுக்கு அக்னிதேவனே வந்து உதவினான். எதனால்? அவனுடைய நித்ய அனுஷ்டான பலத்தினால்.

நித்தியானுஷ்டானத்தில் இருந்ததால் ஊர் சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற சுதந்திரம் அவனுக்கு இல்லாவிட்டாலும் கடமையைச் செய்த திருப்தி இருந்தது. இவ்வாறு பெரியவர்களின் வரலாறுகளை பரிசீலித்து பார்த்தால் தர்மத்தை விடாமல் கடைபிடிப்பதே அனுஷ்டானம் என்பது புரிகிறது.

இவ்வாறு ஒவ்வொருவரும் அவரவருக்கு விதிக்கப்பட்ட சுயதர்மத்தை விடாமல் கடைபிடிக்க வேண்டும். அப்படியின்றி ஸ்வதர்மத்தை ஏமாற்றிவிட்டு ஏதேதோ யாத்திரை போகிறேன் என்று கிளம்பினால் அது சரி வராது.

அது மட்டுமல்ல. “பெரியவர்கள் இப்படிப்பட்ட தர்மங்களை எல்லாம் ஏற்படுத்தி எங்களுக்கு சுயேச்சையோ சுதந்திரமோ இல்லாமல் செய்து விட்டார்களே!” என்று வருத்தப்படவும் கூடாது.

தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருப்பதால் விளையும் ஆனந்தம் இஷ்டம் வந்தாற்போல் சுதந்திரமாக அனுபவிக்கும் போது கிடைக்கும் சுகத்தை விடச் சிறந்தது என்கிறது சாஸ்திரம்.

ஒருவர் கேட்டார், “வீட்டில் வயதான பெற்றோர் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு எங்குமே போக முடியவில்லை. அவர்களை பார்த்துக் கொள்வதிலேயே நேரம் போய்விடுகிறது. எங்களுக்கு தீர்த்த யாத்திரையும் இல்லை…. க்ஷேத்திர தரிசனமும் இல்லை!” என்று அலுத்துக்கொண்டார். பெற்றோரை கஷ்டப்படும்படி அநாதரவாக விட்டு விட்டு ஊர் சுற்ற விரும்புவது தகுமா?

அவ்வாறு செய்தால் தெய்வம் மகிழாது. பெற்றோருக்கு உணவவளிக்காமல் காசிக்குச் சென்றாலும், ஹிமாலயம் சென்றாலும், ராமேஸ்வரம் சென்றாலும் எந்த தெய்வமும் கருணை காட்டாது! தீர்த்த யாத்திரையின் பலனும் கிடைக்காது. இதனைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தர்மத்தைக் கடைபிடித்தால்தான் அனைத்தும் கிடைக்கும். தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் தடை ஏற்படா வண்ணம் தீர்த்த யாத்திரை செய்தால் தவறொன்றுமில்லை. அதனால் ஸ்வ தர்ம அனுஷ்டானம் சுதந்திரத்தை இழக்கச் செய்வது போல் தோன்றினாலும் அது கொடுக்கும் திருப்தியும் சந்தோஷமும் நிலைத்து நிற்கக் கூடியவை.

இத்தகைய உயர்ந்த வாக்கியங்களைக் கூறிய ருஷிகளுக்கு வந்தனம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories