கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 9

மகா பெரியவர் மகிமை

ஆனால், பாவம்! அகத்தார் உபநயனமாகதவன் வேதம் சொல்லக்கூடாதென்று தடுத்துவிட்டார்கள். இவன் செல்லந்தான், அவர்களும் துளி ‘முற்போக்கு’ எனப்படுவதுதான் – என்றாலும் வைதிகாசார முறைக்குப் பெரும்பாலும் கட்டுபட்டவர்களே ஆதலால் கண்மணிக்கும் இந்தக் கட்டுபாடு. ஐந்தாண்டுகளுக்குப் பிறகே ஸ்வாமிநாதனுக்கு உபநயனமானது. இளம் ப்ரஹ்மசாரிகள் வழக்கமாகக் கற்கும் வேதஸூக்தங்கள் சிலவே அதன்பின் அவன் கற்றதாக ஊகிக்கப்படுகிறது. அடுத்த இரண்டாம் ஆண்டே அவன் துறவியாகிவிட்டான். அதன்பின் குறுமுக அத்யயனம் என்றில்லாமல், கேள்வியிலேயேதான் ஸ்ரீ பெரியவாள் வேத ஸூக்தங்கள் ‘கற்றது’, ‘ச்ருதி’ என்றாலே கேள்விதான் என்பது இங்கே இப்படிப் புத்துருவம் கொண்டது! அதன் பின் கதை. நம் கதை ஆரம்பித்து, காந்தனிடமிருந்து கேள்வியிலேயே கிணி கற்றுக்கொண்ட மந்திரங்களில் ஸ்ரீ கணபதி ஆவாஹனம் குறித்தது உண்டா என்பதுதான். என் கேல்வித் தாளை- அதாவது, நான் கேள்வி எழுதியிருந்த தாளை- பார்த்த ஸ்ரீ சரணர் அவருக்கே உறியபடி, எதிர்பாராத ஒன்றில் தொடங்கினார் : “நேரெதிரா அர்த்தம் குடுக்கற ரெண்டு வார்த்தையச் சேத்துச் சொல்ற figure of speech-கு என்ன பேரு? Oxymoron-ஆ ?” “ஆமாம்.” “சின்னப் பெரியவாள்-நு எழுதியிருக்கியே! அதுக்குச் சொல்ல வந்தேன். சின்னதைப் பெரிசோட சேர்த்தா மரியாதை ஸ்தானத்துல இருக்கப்பட்டவா விஷயத்துல அழகாயில்லே… பெரிசு ரொம்பப் பெரிசாகிற துண்டோல்லியோ? ஆகையினாலே கலவைப் பெரியவர் ரெண்டு பேர்ல பெரியவரை கலவைப் பெரியவா-ன்னும், அடுத்தவரை (சின்னவரை என்று வறாத அழ்கைக் கவனிக்கவும்!) வெறுமே கலவைப் பெரியவா-ன்னும் சொல்லலாம். ‘சின்னப் பெரியவா-ன்னா, சின்னவர் எப்படிப் பெரியவராயிருப்பார்? பெரியவர் எப்டிச் சின்னவராயிருபார்? ரொம்பப் பேர் புதுபெரியவாளுக்கு ஆச்ரமம் குடுத்த புதுசுல அவரை அப்டிதான் சொல்ல ஆரம்பிச்சா, பொருத்தமாயில்லேன்னுதான் அதை ‘புதுப் பெரியவா’-ன்னு மாத்திக் குடுத்தது— “கன்னடத்துல ‘சிக்க-ன்னா ‘சின்ன’. இந்த மடத்து ஸ்வாமியாற்மார்களுக்கு ‘சிக்க ஓடையாரு;-ன்னு பேர் குடுத்து சாசனங்கள், பத்ராங்கள் இருக்கு. ‘ஓடையாரு’னா ஸ்வாமி.’ ‘ஸ்வாமி’-ங்க்றதுக்கு நேர்த் தமிழ் ‘உடையவர்’; கன்னடத்துல ‘ஓடையாரு’—ஸ்வாமி – உடையவர் ஒரே அர்த்தம்-கிறது தெரியுமோ?” என்று கேட்டார். -தொடரும்.. ஸ்ரீ ரா.கணபதி அண்ணா அவர்களின் தொகுப்பில் இருந்து பிரசுரிக்கபட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.