December 5, 2025, 1:47 PM
26.9 C
Chennai

“நம் பெரியவாளும் சிருங்கேரி பாரதி ஸ்வாமிகளும் பொரிந்து தள்ளிய இரு சம்பவங்கள்”

“நம் பெரியவாளும் சிருங்கேரி பாரதி ஸ்வாமிகளும் பொரிந்து தள்ளிய இரு சம்பவங்கள்”

“‘ஏண்டா, பைத்தியம் என்ன, சரியாயிருக்கிறது என்னன்னு நீதான் சகலமும் 29570792 1912794232099066 6911014755507604445 n - 2025கண்டுட்டியோ? என்னமாடா சொல்லுவே அந்த வார்த்தை?-பெரியவா

‘நாங்க ரெண்டு பேரும் வேறேன்னு நீர் வித்யாசம் பாராட்டிண்டு அங்கே பாதி பூஜையிலே விட்டுட்டு வந்தது மஹா தப்பு. க்ஷணம் கூட இங்கே நிற்காதேயும். போம் அங்கேயே’-சிருங்கேரி பாரதி ஸ்வாமிகள்.

.

கட்டுரையாளர்-ரா.கணபதி.
கருணைக் கடலில் சில அலைகள்.-புத்தகம்.

பெரியவா அப்படி ஹாங், ஹாங் ன்னு பொருமி நான் வேறெப்போதும் பார்த்ததில்லை’ என்று கூறி காஞ்சி மட மேனேஜர் விஸ்வநாத ஐயர் ஒரு சம்பவம் நினைவு கூர்வார். பாரதி ஸ்வாமிகள் அவதூதராக, ஆடிப்பாடி, அழுது, சிரித்துக்கொண்டு அதீத நிலைகளில் இருந்த சமயங்களில் ஒன்றாம்.

அதை பற்றி ஓர் அடியார் மஹா பெரியவாளிடம், ‘அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதாம்’ என்றாராம். அவ்வளவுதான், பெரியவாள் காதில் நாராசம் பாய்ந்தாற்போல, ‘சிவ சிவா, சிவ சிவா, சிவ சிவா’ என்று ஏறக்குறைய அலறியே விட்டு, முன்பின் எப்போதும் இல்லாத படி, பொருமி தீர்த்து விட்டாராம்.

‘ஏண்டா, பைத்தியம் என்ன, சரியாயிருக்கிறது என்னன்னு நீதான் சகலமும் கண்டுட்டியோ? என்னமாடா சொல்லுவே அந்த வார்த்தை?’ என்று வெகு நேரம் பொரிந்து தள்ளிவிட்டு, ‘சந்நிதிக்கு போய் சந்திரமௌலீஸ்வரர் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கோ’ என்று முடித்தாராம்.

மஹா பெரியவாள் 1935 இல் கல்கத்தாவுக்கு எழுந்தருளி நவராத்திரி வழிபாடு நடத்தினார். அவ்வழிபாட்டுக்கான நிர்வாக குழு உறுப்பினர்களில் சிருங்கேரி பீடத்து பரம பக்தரான மந்திரேஸ்வர சர்மா ஒருவர்.

நவராத்திரி முதல் நான்கு நாள் – சதுர்த்தி வரை – பூஜைகளில் தொண்டு செய்த அவருக்கு அதற்கு மேல் பொருந்தவில்லை. ‘என்ன இருந்தாலும், நம் சிருங்கேரி பத்ததியில் நம் சிருங்கேரி ஆச்சாரியாள் செய்யும் பூஜை போல் ஆகுமா?’ என்று தோன்றி, இருப்பு கொள்ளாமல், ஆயிரம் காவதம் கடந்து சிருங்கேரி அந்து சேர்ந்தார்.

ஆனால் பாரதி ஸ்வாமிகளோ தம் இயல்புக்கு மாறாக அசாத்திய கடுமையுடன் அவரை நோக்கினார்.

‘நாங்க ரெண்டு பேரும் வேறேன்னு நீர் வித்யாசம் பாராட்டிண்டு அங்கே பாதி பூஜையிலே விட்டுட்டு வந்தது மஹா தப்பு. க்ஷணம் கூட இங்கே நிற்காதேயும். போம் அங்கேயே’ என்று நிர்தாட்சிண்யமாக சொல்லி விட்டார்.

சர்மா பக்குவியாதலால் பாடம் பெற்றார். பாவனா சுத்தி பெற்றார்.

இன்று போல், பிரயாண வசதிகள் இல்லாத அந்நாளில் எப்பாடோ பட்டு சரியாக விஜய தசமி அன்று கல்கத்தா சேர்ந்து மஹா பெரியவாளின் காலில் விழுந்தார்.

பாரதி ஸ்வாமிகள் கூறியதை சொல்லி, தமது பேத எண்ணம் பேதிக்கப்பட்டதை தெரிவித்து கொண்டார்.

மஹா பெரியவாள் ஆனந்தமாக சிரித்துக்கொண்டு அவருக்கு தாராளமாக நவராத்திரி பிரசாதங்கள் அளித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories