“நீங்கள் தான் ஜகத்குரு” (மூக்கறுபட்ட வடநாட்டுப் பண்டிதர்கள்) சொன்னவர்; ப்ரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்,காஞ்சிபுரம். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். 1933ம் வருஷம் காசி யாத்திரையின் போது நடந்த நிகழ்ச்சி. பனாரஸ் ஹிந்து யூனிவர்ஸிடிக்கு, ஒரு மாலைப்போதில் ஸ்ரீ பெரியவாள் ‘விசிட்’. பெரியவாள் போனபோது, மண்டக்குளத்தூர் பிரம்மஸ்ரீ சின்னசாமி சாஸ்திரிகள், பாடம் சொல்லிக்கொண்டிருந்தார். அப்பைய தீட்சிதர் எழுதிய ‘விதிரஸாயனம்’ என்ற மீமாம்ஸாசாஸ்திரம். ஸ்ரீ தீட்சிதரின் நடையழகில் ஸ்ரீ பெரியவாள்சொக்கிப் போனார்.உடன் வந்திருந்த ‘ஆத்ம வித்யா பூஷணம்’இஞ்சிக்கொல்லை பிரும்மஸ்ரீ ஜகதீஸ்வர சாஸ்திரிகளிடம்சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டார். (பின்னர்தான்,அப்பைய தீட்சிதரின் எல்லாக் கிரந்தங்களையும் ஸ்ரீ பெரியவாள் படித்தார்.) காசி மன்னர் அரண்மனையில், பெரியவாளுக்கு வரவேற்பு. நகரத்தின் முக்கியப்பிரமுகர்கள்வந்திருந்தார்கள்.ஏராளமான பண்டிதர்கள். அவர்கள் மனத்தில் ஓர் இளக்காரம்; இனம் புரியாத அசூயை. ‘இவர் என்ன ஜகத்குரு என்று பட்டம் போட்டுக்கொள்வது?… ரெண்டு கேள்வி கேட்டு, மடக்கி விடலாம் !…’ பெரியவாள் வந்து அமர்ந்ததும், ஒரு பண்டிதர், ஆவேசமாகக் கேட்டார், “அது யார், ஜகத்குரு?” “நான் தான் !…” என்றார், பெரியவாள். “ஓஹோ?..நீங்க ஜகத்துக்கே குருவோ?” “இல்லை. ஜகதாம் குரு: ந (நான் ஜகத்துக்கெல்லாம் குரு- என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை) ஜகதிபத்யமானா: ஸர்வே மம குரவ:” (உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும், எனக்குக் குருக்கள்- என்ற பொருளில், நான் ஜகத்குரு) வடநாட்டுப் பண்டிதர்கள் திகைத்துப் போனார்கள். இவ்வளவு அருமையான, எளிமையான விளக்கத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பெரியவாள், அந்தப் பெரிய அறையின் சுவர்களின் மேற்பகுதியில், புறாக்களுக்காக அமைக்கப்பட்டிரூந்த சிறு சிறு பொந்துகளில் கட்டப்பட்டிருந்த குருவிக் கூடுகளைப் பார்த்தார். பண்டதர்களிடம் காட்டி, “கிமிதம்”? (இது என்ன?) என்று கேட்டார். “நீட:” (கூடு) “கேன நிர்மிதம்?” (யாரால் கட்டப்பட்டது?) “சடகே..” (குருவிகள்) “கை-கால் இல்லாத குருவிகள் கூடு கட்டுகின்றன. நமக்குக் கை-கால் உண்டு. என்றாலும்,பறவைகள் மாதிரி கூடு கட்ட முடியவில்லை. குருவிகளிடம் ஒரு கிரியா சக்தி இருக்கிறது. அது,என்னிடம் இல்லை. அதனால், குருவி, என்னுடைய குரு…” என்று சொல்லி, கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகூப்பி வணங்கினார். இதை நேரில் கண்ட வடநாட்டுப் பண்டிதர்கள் பிரமித்துப் போய்விட்டார்கள். “நீங்கள் தான் ஜகத்குரு” என்று மனமாரப் போற்றிப் பணிந்தார்கள். பெரியவாள் காசியில் இருந்த கடைசி நாள் வரை, அவர்கள் எல்லாரும் தினமும் முகாமுக்கு வந்து நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார்கள்
“நீங்கள் தான் ஜகத்குரு”
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari