பரமன் அளித்த பகவத் கீதை (10): மகாபாரதம் பற்றி வானவியல் சான்றுகள்

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 10மகாபாரதக் கதை

மகாபாரதம் பற்றி வானவியல் சான்றுகள்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

13 நாள்களில் இரண்டு கிரகணங்கள்

          மகாபாரதப் போர் நவம்பர் 22, 3067 கிமு அன்று தொடங்கியது. இது வானியல் ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது. மேலும் வானில் சில கோள்களின் அமைப்புகள் தன்னிச்சையாக நடப்பவை அல்ல. அல்லது ஒரு சில ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் நிகழக்கூடியவை அல்ல. அவை மிகவும் அரிதான நிகழ்பவை.

          மகாபாரதப் போருக்கு முன்னும் பின்னுமாக இரண்டு கிரகணங்கள் நடந்தன. ரோகிணி நட்சத்திரத்தில் சனி மற்றும் கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாய், கார்த்திகை நட்சத்திரத்தில், அதாவது விருச்சிக ராசியில் கார்த்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும்போது சந்திர கிரகணம் மற்றும் கேட்டை நட்சத்திரத்தில் அதாவது மார்கழி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் போன்ற கிரக நிலைகள் மகாபாரதத்தியல் உத்யோக பர்வம் மற்றும் பீஷ்ம பர்வத்தில் காணக் கிடைக்கும் தகவல்கள் ஆகும்.

(1) அமாவாசை 19 வருடங்களுக்கு ஒருமுறை கேட்டையில் வருகிறது

(2) அவ்வாறு அமாவாசை கேட்டை நட்சத்திரத்தில் வரும்போது,  சூரிய கிரகணம் 340 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே நிகழ்கிறது.

(3) மார்கழி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நடக்கும்போது ரோகிணியில் சனி கிரகம் இருப்பது 7000 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே ஏற்படுகிறது.

          ஆக, வானவியலில் அதைப் போன்ற விண்மீன் அமைப்பு மகாபாரதத்திற்குப் பிறகு ஏற்படவில்லை. எனவே தேதி – சரியான ஒன்று. மகாபாரதப் போர் நடந்த தேதி பிளனட்டோரியம் மென்பொருள்மூலம் நமக்குத் தெரிவது கிமு 3067ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 22ஆம் நாள்.

குதிரைக் கதை

          பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் ஒரு  சந்தைக்குள் நுழைந்தான். அங்கே ஒரு அழகான குதிரையைப் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, “குதிரை என்ன விலை? என்று கேட்டான்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

குதிரையின் உரிமையாளரோ, “ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்” என்றார்.

சகாதேவன் உடனே, “சரி கேள்வியைச் சொல்லுங்கள்” என்றான்.

குதிரையின் உரிமையாளர், “நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் சொல்லுங்கள் – ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை. இது ஏன்? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்” என்றார். சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்துவிட்டான்.

          சற்று நேரத்தில்…. சகாதேவனை தேடிக்கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்.

          குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். “ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு, குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.

          துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?” என்றார்.

நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

          அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.

ALSO READ:  ஆதிசங்கரரின் சதச்லோகி - எளிய விளக்கம்!

          “ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்?

          பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்” என்றார். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

          சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, “தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா!” என்றார்.

          பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், “அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்?” எனக் கேட்டார்.

          அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான்.

          அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள் எல்லாரும் திகைத்தார்கள்.

          “அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக என்ன நடந்தது?” எனக் கேட்டார்கள்.

தர்மர் பதில் சொல்லத் தொடங்கினார்…

☸ “தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப் போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன.”

☸ அதை நினைத்துத்தான் நடுங்கினேன். “ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்” என்று விரிவாகக் கூறினார்.

☸ “உங்களிடம் கேள்வி கேட்டவன் கலி புருஷன்! அவன் கேட்ட முதல் கேள்வியில்

⚜பெரிய கிணறு என்பது பெற்றோர்கள்.

ALSO READ:  சனாதன தர்மத்தில் வேறுபாடுகள்; சர்ச்சைகள்; தீர்வு என்ன?

⚜ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள்.

☸ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்பது குறிக்கிறது.

☸ ஆனால், அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.

☸ அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும்.

☸ ஆனால், நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைத்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

☸ அடுத்து மூன்றாவது கேள்வியில்,

பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும்.

☸ அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள்.

☸ மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத் தான் இருப்பார்கள்.

☸ இதைத்தான், வேலி அப்படியே இருக்க, பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்.

🚨கலியுகத்தில் உலகம் இப்படித்தான் இருக்கும் என்பது மகாபாரத காலத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

Entertainment News

Popular Categories