பரமன் அளித்த பகவத் கீதை(12): வியாச பகவானின் வானியல் ஞானம்!

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 12: மகாபாரதக் கதை
வியாச பகவானின் வானவியல் அறிவு

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

வேத வியாஸர் தான் இயற்றியுள்ள மஹாபாரதத்தில் நடக்கும் மாபெரும் போரை வானில் பார்த்துத் தான் எழுதினாரா? வியாஸரின் மஹாபாரதத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு என்று சொல்வதை நிரூபிக்கும் வகையில் அர்ஜுனனின் நட்சத்திரமும் பீஷ்மரின் நட்சத்திரமும் அமைந்துள்ளது எவ்வளவு அற்புதமான விஷயம்! நட்சத்திர அதிசயங்கள் வரிசையில் இந்த மர்மத்தைப் பார்க்கலாம்!

வியக்க வைக்கும் புதிர் சுலோகம்

மகாபாரதத்தில் ஒரு சுவாரசியமான சுலோகம் பீஷ்ம அர்ஜுன யுத்தத்தின் மர்மத்தையும் வானில் நடக்கும் மஹாபாரதப் பெரும் போரையும் விளக்குகிறது.

அர்ஜுனஸ்ய இமே பாணா நேமே பாணா: சிகண்டின:|
க்ருதந்தி மம காத்ராணி மாக மாஸே கவாமிவ||

– மஹாபாரதம் பீஷ்ம பர்வம்

சிகண்டியை முன்னே வைத்து அர்ஜுனன் விடும் இந்த பாணங்கள் மாசி மாதத்தில் பசுக்கள் எப்படி துன்பம் அடைகின்றனவோ அது போல என்னைத் துன்பம் அடையச் செய்கின்றன என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

இந்த சிலேடை செய்யுளின் இன்னொரு அர்த்தம் : சிகண்டியை முன்னே வைத்து அர்ஜுனன் விடும் இந்த பாணங்கள் தாய் நண்டு குஞ்சு நண்டை பிரசவிக்கும் போது, தன் மரணத்தால் அடையும் துன்பத்தைப் போல என்னைத் துன்பப்படுத்துகிறது என்பதாகும்.

எத்தனை அற்புதமான ஆழ்ந்த பொருளுடைய செய்யுளாக இது அமைந்துள்ளது! ‘மாக மாஸே கவாமிவ’ என்ற சொற்றொடருக்கு மாசி மாதத்தில் பசுக்கள் அடையும் துன்பம் போல எனப் பொருள் கொள்ளலாம். அதையே மாகமா என்றால் தாய் நண்டு என்றும் ஸேசுவா என்றால் குஞ்சு நண்டு என்று பிரித்தும் இன்னொரு பொருள் கொள்ளலாம். தாய் நண்டு பிரசவிக்கும் போது அது மரணமடைகிறது. குஞ்சு நண்டு பிறக்கிறது. அது போல என் வேதனை உள்ளது என்று பீஷ்மர் கூறுவதாக உள்ள சுலோகம் வியாசர் ஒரு மிருக இயல் நிபுணர் என்பதை  உணர்த்துகிறது. மேலும் அவர் ஒரு வானவியல் நிபுணர் என்பதையும் நிரூபிக்கும் வண்ணம் இந்த ஸ்லோகம் அமைந்துள்ளது. 

பசுக்களுடன் தொடர்பு கொண்டுள்ள அவிட்டம்

டெல்பினஸ் என்று மேலை நாட்டில் அழைக்கப்படும் ச்ரவிஷ்டா அல்லது அவிட்ட நட்சத்திரம் மகர மற்றும் கும்ப ராசிகளில் உள்ளது. இந்தத் தொகுதியில் ஏழு நட்சத்திரங்கள் இருக்கின்றன. பிரதான நட்சத்திரமாக அவிட்டம் திகழ்கிறது. இதை சீனா உள்ளிட்ட பல தேசங்களும் காளை அல்லது பசு போன்ற தோற்றமுடைய நட்சத்திர மண்டலம் என்று குறிப்பிடுகின்றன. இதில் உள்ள இரு பெரும் நட்சத்திர கணங்கள் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ஒளி ஆண்டுகள் தள்ளி உள்ளன என்று அறிவியல் கூறுகிறது. கற்பனைக்கும் அப்பாற்பட்ட தூரம் இது. இந்த அவிட்ட நட்சத்திரத்தின் அதி தேவதை வசுக்கள். பீஷ்மரின் பிறப்பைப் பற்றி அனைவரும் அறிவர். 

அஷ்ட வசுக்களான தரன், த்ருவன், சோமன், அஹன், அநிலன், அநலன், பிரத்யூஷன், ப்ரபாசன் ஆகியோர் ஒரு முறை மனைவிமார்களுடன் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்குச் சென்றனர். அங்கே இருந்த நந்தினி என்ற காமதேனுவைப் பார்த்த அவர்கள் அதை அடைய ஆசைப்பட்டனர். ப்ரபாசன் என்றும் த்யோ என்றும் அழைக்கப்படும் வசு நந்தினியைக் கவர்ந்தான். அதை அறிந்த வசிஷ்டர் அந்த எட்டுப் பேரையும் மனிதப் பிறவி எடுக்கும்படி சபித்தார். 

வசுக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பசுவைக் கவர்ந்த தியோ மட்டும் நீண்ட நாள் பூமியில் வாழ வேண்டும் என்றும் ஏனைய ஏழு பேரும் உடனே தம் லோகம் திரும்பலாம் என்றும் சாப விமோசனமும் கொடுத்தார். பிரபாசன் அல்லது தியோ என்று அழைக்கப்பட்ட எட்டாவது வசுவே பீஷ்மர்! 

அவர் துரியோதனனுடன் சேர்ந்து பஞ்ச பாண்டவரை மஹாபாரத யுத்தத்தில் எதிர்த்தார். 18 நாட்கள் நடந்த யுத்தத்தில் முதல் பத்து நாட்களுக்கு பீஷ்மர் சேனாபதியாக இருந்து உக்கிரமாக போரிட்டார். பத்தாம் நாள் சிகண்டியை முன்னிலைப் படுத்தி அர்ஜுனன் விடுத்த பாணங்களால் அடிபட்டு வீழ்ந்தார். முன்பே செய்த பிரக்ஞையின் படி சிகண்டியுடன் போர் புரிய பீஷ்மர் மறுத்து விட்டார். உத்தராயணம் வரும் வரை காத்திருந்து பின்னர் தன் உயிரை விட்டார்.
ALSO READ:  ஆதிசங்கரரின் சதச்லோகி - எளிய விளக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories