December 16, 2025, 5:38 PM
26.8 C
Chennai

“எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும், மகா பெரியவாளும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!”

295603_479182172136829_1054166438_n10464395_10202990041086451_8952509341741983225_n “எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும், மகா பெரியவாளும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!” (இன்று முதல் பகுதி-1) திரு இந்திராசௌந்திரராஜன் பொதிகையில் 18-03-2015 காலை 07-15க்கு சொல்லிய அற்புத நிகழ்வு. அவர் சொற்பொழிவு 19-03-2015 இதன் இரண்டாம் பகுதி தொடர்கிறார்) (வலையில் கிடைத்த ஒரு பொக்கிஷம்-கட்டுரை மிகப் பெரிதாக இருப்பதால் இரண்டு நாள் தொடரும்) தன்னையே அனுதினமும் துதித்து வந்த ஆனால் தன்னிடம் எதையுமே எதிர்பாராமல் வாழ்ந்து வந்த தன் உன்னத பக்தை இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் வாழ்வில் அந்த ஏழுமலையானும் காஞ்சி மகாபெரியவாவும் நிகழ்த்திய நெஞ்சை உருகவைக்கும் நாடகம் இது. “அன்புள்ள பிரசாத், ஆசிகள். உதாரணத் தம்பதிகளாக திகழ்ந்து வரும் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியும் சதாசிவமும் தற்போது தீவிரமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு உடனடியாக ஏதேனும் உதவி செய்யவேண்டும். ஏதாவது திட்டம் வகுத்து அவர்கள் தங்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.” 1979 ஆம் ஆண்டு வாக்கில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அப்போதைய செயல் அதிகாரியாக இருந்த பி.வி.ஆர்.கே.பிரசாத் அவர்களுக்கு காஞ்சி பரமாச்சாரியாரிடமிருந்தும் புட்டபர்த்தி சத்யா சாய்பாபாவிடமிருந்தும் மேற்படி தகவல் அடங்கிய தந்தி வந்தது. ஹிந்து சமயத்தின் இருபெரும் சிகரங்களாக திகழ்ந்த இவர்களின் மேற்கூறிய வரிகள் எவரையுமே ஒருகணம் அசைத்துப் பார்த்துவிடும் எனும்போது பிரசாத் எம்மாத்திரம்? அதிர்ச்சியில் உறைந்தார். ஆனால், பிரசாத்துக்கு தந்தியை யார் அனுப்பியிருக்கிறார்கள் என்பதில் அதிர்ச்சியில்லை. அதில் கூறப்பட்டிருந்த விஷயம் தான் அதிர்ச்சியளித்தது. “என்ன ஆச்சு எம்.எஸ். அம்மாவுக்கு… அதுவும் காஞ்சி பெரியவர் சாய்பாபா இரண்டுபேருமே தலையிடுற அளவுக்கு நிலைமைமோசமா?” மனம் பதைபதைத்தது. அது மட்டும் இல்லை எம்.எஸ்.க்கு உதவி செய்ய ஏன் பிரசாத் அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்? பல கேள்விகள். இசையரசி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மிக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தங்களது அபிமான பாடகிக்கு இப்படியொரு பிரச்னை என்றால் அவர்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள். ஆனால், எம்.எஸ். அவர்கள், தான் கேட்காமல் தானாக வரும் எந்த உதவியையும் பெறவிரும்பமட்டார்கள். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே அல்லவா? யாரிடமும் எந்த உதவியும் பெற எம்.எஸ். அவர்கள் விரும்பாத இப்படிப்பட்ட சூழ்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் உடனடியாக ஏதேனும் செய்து, எம்.எஸ். அவர்களின் நெருக்கடியை போக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதற்கு முன்பு திருமலை தேவஸ்தானம் இது போன்ற அசாதாரண சூழ்நிலைகள் பலவற்றை சந்தித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையை கையாள பிரசாத்தை தவிர பொருத்தமான ஆள் வேறு யாரும் கிடையாது. எனவே தான் பிரசாத்திடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தார் காஞ்சி பெரியவர். சரி… எம்.எஸ். அம்மாவுக்கும் சதாசிவத்துக்கும் என்ன ஆச்சு? உடனடியாக சென்னையில் உள்ள தனது நம்பிக்கைக்குரியவர்களை வைத்து பிரசாத் ஒரு ரகசிய விசாரணையில் இறங்கினார். அதில் அவருக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் : எம்.எஸ்.சுப்புலட்சுமி, சதாசிவம் தம்பதிகள் தங்களது கல்கி எஸ்டேட்டை விற்றுவிட்டு வள்ளுவர் கோட்டம் அருகே ஒரு வாடகை வீட்டில் குடியேறியிருக்கின்றனர் என்பதே. கல்கி பத்திரிக்கையை திரு.சதாசிவம் நடத்திவந்த காலகட்டம் அது. எதிர்பாராதவிதமாக பத்திரிக்கை நஷ்டத்தில் மூழ்க, தங்களது கடன்களை அடைக்க, இப்படியொரு முடிவை (கல்கி எஸ்டேட்டை விற்பது) அத்தம்பதிகள் எடுக்க நேர்ந்தது. எம்.எஸ்.அம்மாவின் மிகப் பெரிய ரசிகரான திரு.பிரசாத்தை இத்தகவல் துயரத்தில் ஆழ்த்தியது. கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டே தனது அலுவலகத்தில் உள்ள ஏழுமலையான் படத்தின் முன்பு நின்று, “ஹே…ஸ்ரீனிவாசா…. உன் பஜனைகளையும் கீர்த்தனைகளையும் பக்தியுடன் உலகின் மூளை முடுக்குகளிலெல்லாம் சென்று பாடி வந்தவர் எம்.எஸ். அவர்கள். அவருக்கு தனது இறைபணியில் மிகவும் உறுதுணையாக இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவந்தவர் சதாசிவம் அவர்கள்.” “உலகம் முழுதும் எம்.எஸ்.அம்மா பல நிகழ்சிகள் நடத்தியிருக்கிறார். அவர் என்ன தொகை கேட்டாலும் கொட்டிக்கொடுக்க பலர் தயாராக இருந்தபோது, எனக்கு இவ்வளவு வேண்டும் என்று கேட்க்காமல், அவருக்கு என்ன தரப்படுகிறதோ அதைக்கொண்டு அமைதியாக மனநிறைவாக வாழ்ந்துவந்தவர் எம்.எஸ். இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தனக்கு கிடைத்த வருவாயை பெரும்பாலும் அவர் தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் பல்வேறு தர்ம காரியங்களுக்கே திருப்பி கொடுத்தவர். யாருக்கு வரும் இப்படி ஒரு மனது? அவருக்கு இப்படி ஒரு பிரச்னை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நீ என்ன செய்யப்போகிறாய் பாலாஜி?ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாய் ? இது உனக்கே சரியாகப் படுகிறதா?” (1963 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் எம்.எஸ்.அவர்களின் குரலில் வெங்கடேச சுப்ரபாதத்தை வெளியிட்டனர். மணவாள மாமுனிகளின் சிஷ்யராக விளங்கிய காஞ்சிபுரத்தை சேர்த்த பிரதிவாதி பயங்கரம் அனந்தாச்சாரியார் என்பவரால் 14 ஆம் நூற்றாண்டு இயற்றப்பட்டது இந்த வெங்கடேச சுப்ரபாதம். இந்த பாடலின் விற்பனை மூலம் தனக்கு வரும் ராயல்டி அனைத்தையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வரும் வேத பாட சாலைக்கே கிடைக்கும்படி செய்துவிட்டார் எம்.எஸ். என்பது குறிப்பிடத்தக்கது.) “சுவாமி… மானமே பெரிதென்று வாழும் உத்தம தம்பதிகள் அவர்கள். யாரிடமும் எந்த உதவியும் எதிர்பார்க்க மாட்டார்கள். கேட்கவும் மாட்டார்கள். உன்னிடம் கூட. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீ எப்படி எம்.எஸ். அவர்கள் இனி சராசரி வாழ்க்கையை வாழ்வார் என்று எதிர்பார்க்கலாம்? எனக்கு உண்மையில் அவர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏழுமலையானே… நீ தான் தலையிட்டு உடனடியாக அந்த திவ்ய தம்பதிகளுக்கு ஏதேனும் உதவிடவேண்டும்!”இப்படி ஸ்ரீனிவாசனிடம் மனமுருக வேண்டிக்கொண்டார் பிரசாத். அடுத்து ஒரு நொடியை கூட வீணாக்காது, உடனடியாக திருமலை தேவஸ்தானத்தின் அவசர கூட்டத்தை கூட்டினார் பிரசாத். கூட்டத்தில் எம்.எஸ். அவர்களுக்கு எந்த விதத்தில் உதவ முடியும் என்று ஆலோசிக்கப்பட்டது. ஒரு மித்த குரலில் அனைவரும் சொன்னது இதைத்தான். “சார்… எம் எஸ்.- சதாசிவம் தம்பதிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையை கண்டு நாங்கள் வருந்துகிறோம். உங்களுக்கே தெரியும் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் தான் நம் தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான். அவர் ஏற்கனவே நமது தேவஸ்தானத்தின் பல சிறப்புக்களை கௌரவங்களை பெற்றுவருகிறார். எங்கள் எல்லாருக்கும் அவரது இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்ய விரும்பினாலும், நம்மால் எதுவும் செய்யமுடியாது என்றே நினைக்கிறோம். நாமாக எந்தவொரு முடிவையும் தன்னிச்சையாக எடுக்கமுடியாது. மேலும் அறநிலையத்துறைக்கு நாம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம்!” என்றனர். கோடிக்கணக்கான மக்களை தனது இசையால் மகிழ்விக்கும் இசையரசிக்கு உடனடியாக ஏதேனும் செய்தே தீரவேண்டிய ஒரு சிக்கலான சூழ்நிலையில் இப்படி பிரச்னை மேலும் சிக்கலாகிறதே… என்று பிரசாத் தவித்த சூழ்நிலையில்… ஏழுமலையான் தலையிட்டான். எம்.எஸ். அவர்களின் வாழ்க்கையில் ஏழுமலையான் எந்தளவு சம்பந்தப்பட்டுள்ளான் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. வணக்கத்திற்குரிய அந்த தம்பதிகளுக்கு உடனடியாக எதுவும் செய்ய முடியவில்லையே என்று மிகவும் மனமுடைந்த நிலையில் அன்று மாலை ஏழுமலையானை தரிசிக்க பிரசாத் செல்கிறார். வழக்கமாக பணிமுடிந்து வீட்டுக்கு செல்வதற்கு முன்பு ஏழுமலையானை தரிசித்துவிட்டு செல்வது அவர் வழக்கம். ஏழுமலையானை தரிசித்துவிட்டு வெளியே வரும்போது நடந்த அந்த நிகழ்ச்சி இந்திய இசைத்துறையில் மிகப்பெரிய புரட்சிக்கு வித்திட்ட ஒன்று. அப்படி என்ன நடந்தது எப்படி நடந்து? அவர் வெளியே வரும்போது பிரகாரத்தின் ஓரத்தில் எங்கிருந்தோ வந்த ஏழை பக்தர்கள் சிலர் அன்னமாச்சாரியாவின் கீர்த்தனைகளை மனமுருக பாடிக்கொண்டிருந்தனர். எம்.எஸ். அவர்களை பற்றிய சிந்தனையிலேயே நடந்து வந்துகொண்டிருந்த திரு.பிரசாத், அவர்களை கடந்து செல்லும்போது, யாரோ தன்னை தடுப்பது போல ஒரு கணம் உணர்ந்து அங்கு நின்றார். அந்த பஜனைக் கோஷ்டி ஊனையும் உள்ளத்தையும் உருக்கும்படி பாடிக்கொண்டிருந்ததனர். இவருக்கு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்தது. ஒரு சில நிமிடங்கள் அவர்கள் பாடுவதை கேட்ட திரு.பிரசாத் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டார். மெலிதாக ஒரு புன்னகை புரிந்தார். அதை கண்டு ஏழுமலையான் புன்னகை புரிந்தான். ஏழுமலையான் புன்னகை புரிந்ததால் ஒட்டுமொத்த திருமலையும் புன்னகைத்தது. அது மட்டுமா நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களும் புன்னகை புரிந்தன. அந்த புன்னகை தான் எம்.எஸ். அவர்களின் பிரச்னையை தீர்க்க உதவியதோடல்லாமல், இந்திய கிளாசிக்கல் இசை வரலாற்றில் ஒரு அற்புதமான வரலாற்றை செதுக்கியது. எம்.எஸ். அவர்களுக்கு ‘பாரத் ரத்னா’ கிடைக்கவும் காரணமாக அமைந்தது. அடுத்த நாள் காலை, பிரசாத் காஞ்சி புறப்பட்டார். அங்கு நடமாடும் தெய்வமாக திகழ்ந்த மகா பெரியவரை சென்று தரிசித்தார். அவர் முன்பு பவ்யமாக பணிந்து “சுவாமி… எம்.எஸ். அம்மாவை பற்றிய தங்கள் தந்தி கிடைத்தவுடன், எனக்கு என்னவோ போலாகிவிட்டது. உடனடியாக தேவஸ்தானத்தின் அவசர கூட்டத்தை கூட்டி உறுப்பினர்களிடம் ஆலோசனை கேட்டேன். எந்தவொரு உருப்படியான யோசனையும் தோன்றவில்லை. மிகுந்த மன சஞ்சலத்துடன் மாலை எழுமலையானை தரிசிக்க சென்றேன். நான் வெளியே வரும்போது எங்கிருந்தோ வந்த ஏழை பக்தர்கள் சிலர் பிரகாரத்தில் அமர்ந்தபடி அன்னமாச்சாரியாவின்கீர்த்தனைகளைபாடிக்கொண்டிருந்தனர். அவர்களது அபாரமான குரல் வளமை மற்றும் நேர்த்தியான இசையால் வயப்பட்ட நான் ஏனோ தெரியவில்லை அதுவரையில் இருந்த குழப்பம் நீங்கப் பெற்றேன். அந்த நேரம் தான் எம்.எஸ். அவர்களுக்கு உதவிட ஒரு அபாரமான திட்டம் தோன்றியது. உடனே உங்களை சந்தித்து ஆலோசித்து செயல்படுத்த வந்திருக்கிறேன்!” என்றார். பரம்பொருளுக்கு தெரியாதா என்ன நடந்தது என்ன நடக்கப்போகிறது பிரசாத் என்ன தன்னிடம் சொல்லப் போகிறார் என்று., இருப்பினும் எதுவுமே தெரியாதவர் போல, நீ மேலே சொல்லு என்பது போல சைகை செய்தார் காஞ்சி முனிவர். பிரசாத் தொடர்ந்தார் “ஏழுமலையான் மீது பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அற்புதமான கீர்த்தனைகளை அன்னமாச்சாரியா இயற்றியிருக்கிறார். அவற்றில் ஒரு சில தான் ஒலி வடிவில் வெளிவந்துள்ளன. இன்னும் வெளியே வரவேண்டிய பல மாணிக்கங்கள் அதில் உள்ளன. தேவஸ்தானம் இதற்கு முன்பு அவற்றை வெளியே கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் அது முழுமை பெறவில்லை.” “என்னுடைய திட்டம் என்னவென்றால், திருமலை தேவஸ்தானம் சில அரிய கீர்த்தனைகளை அடையாளம் கண்டு, எம்.எஸ். அவர்களை தேவஸ்தானம் சார்பாக நான் சென்று சந்தித்து தேவஸ்தானதிற்காக அந்த கீர்த்தனைகளை பாடித்தரும்படி கேட்டுக்கொள்ளப்போகிறேன். இதுவரை தியாகராஜரின் கீர்த்தனைகளை தான் எம்.எஸ். அவர்கள் பாடியிருக்கிறார்கள். அன்னமாச்சாரியாவின் கீர்த்தனைகளை அல்ல.” “என்னுடைய திட்டத்திற்கு நிச்சயம் எம்.எஸ். அம்மா ஒத்துழைப்பார்கள். திருமலைக்கு விஜயம் தரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தினமும் அந்த இசைத்தட்டுக்களை விற்பதன் மூலம் தேவஸ்தானத்திற்கு எக்கச்சக்க வருவாய் கிடைப்பதோடல்லாமல், எம்.எஸ். அவர்களுக்கும் ராயல்டி மூலம் போதிய பணம் கிடைக்கும். இப்படி ஒரு வாய்ப்பு அந்த குடும்பத்திற்கு மறுபடியும் கிடைப்பது மிகவும் கடினம். எனவே எம்.எஸ். அம்மாவும் அதற்கு ஒப்புக்கொள்வார்கள் என்றே கருதுகிறேன்.” என்றார் பிரசாத். பிரசாத் சொன்னதை கேட்டு மெலிதாக புன்னகைத்த மகா பெரியவா “பிரசாத், இறைவன் தன்னை எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் எந்த விதத்தில் வேண்டுமானாலும் வெளிப்படுத்திக்கொள்வான். அவன் அந்தர்யாமி. உனக்கு முன் அந்த ஏழைப்பாடகர்களைப் போன்று தோன்றியது அந்த எழுமளையானாகக் கூட இருக்கலாம். அவர்கள் உன்னைத் தவிர வேறு யார் கண்களுக்கும் புலப்படாத அவன் உருவாக்கிய கண்கட்டு வித்தையாக கூட அது இருக்கலாம். ஏன் மனித வடிவம் எடுத்து வந்த கந்தர்வர்களாகக் கூட அவர்கள் இருக்கலாம். மொத்தத்தில் உன் மனக்குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வந்து தெளிவான ஒரு வழியை காட்ட ஏழுமலையான் நடத்திய நாடகமாக கூட அது இருக்கலாம். நீ அந்த பகுதியை தாண்டிச் சென்றவுடன் அவர்கள் மறைந்து இருக்கலாம். யாருக்கு தெரியும்?” என்றார் மர்ம புன்னகை புரிந்தபடி. பரமாச்சாரியார் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பிரசாத்துக்கு பேச்சு மூச்சே வரவில்லை. “இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்திற்கும் காரண காரியம் உண்டு. தனக்காக எதையும் எதிர்பார்க்காமல் பல வருடங்களாக தொண்டாற்றி எம்.எஸ்.ஸுக்கு நடக்கும் அனைத்தையும் ஆண்டவன் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பானா என்ன? அவன் நடத்தும் நாடகத்திற்கு நம்மை கருவியாக பயன்படுத்திக்கொள்கிறான் என்பதே உண்மை. அறியாமையால் அவனை ஒன்றும் சொல்லாதே!” சாட்சாத் அந்த ஆதிசங்கரரின் மறு அவதாரம் என்றே போற்றப்பட்ட மகா பெரியவரின் பாதங்களில் மீண்டும் விழுந்தார் பிரசாத். பிரசாத்தை ஆசீர்வதித்த பரமாச்சாரியார் “உன் யோசனை அற்புதமானது. எம்.எஸ்.ஸுக்கு உலகம் முழுதும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். தங்கள் அபிமான பாடகிக்கு ஒரு சிறு பிரச்னை என்றால் கோடி உதவிக்கு ஓடிவருவார்கள். ஆனால், எம்.எஸ்.- சதாசிவம் தமபதிகள் மற்றவர்களை போல அல்ல. யாரிடமிருந்து எதையும் அவர்கள் பெறவிரும்பமாட்டார்கள். இதுவரையிலும் தங்களுக்கு தேவையானதை தாங்களே தான் சம்பாதித்துக்கொண்டார்களே தவிர, ஆண்டவனிடம் கூட அவர்கள் எதுவும் கேட்டதில்லை. எனவே அவர்களுக்கு உதவி செய்ய நீ விரும்புவது போல காட்டிக்கொள்ளாமல் இந்த திட்டத்தை அவர்களிடம் கொண்டு செல். நீ அவர்களுக்கு உதவி செய்யவே இந்த திட்டத்தை தீட்டியிருகிறாய் என்று தெரிந்தால் நிச்சயம் அவர்கள் நிராகரித்துவிடுவார்கள். இது மிகவும் சென்ஸிட்டிவான விஷயம். பார்த்து பக்குவமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வை”பரமாச்சாரியார் ஆசீர்வதிக்க காஞ்சி மடத்திலிருந்து வெளியே வருகிறார் பிரசாத். (நாளை கட்டுரை தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழகத்தை ஆபத்தில் தள்ளும் திமுக., அரசு; இந்து முன்னணி கண்டனம்

தமிழக முதல்வர் அவசரம் அவசரமாக சென்னை விமான நிலையம் அருகில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் ஹஜ் விடுதிக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஆரன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து… டிச.23ல் ஐயப்பனுக்கு தங்க அங்கி!

அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்க அங்கி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!

பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்பதற்கும் 'நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா' என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது.

ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!

வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.

பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

தமிழகத்தை ஆபத்தில் தள்ளும் திமுக., அரசு; இந்து முன்னணி கண்டனம்

தமிழக முதல்வர் அவசரம் அவசரமாக சென்னை விமான நிலையம் அருகில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் ஹஜ் விடுதிக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஆரன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து… டிச.23ல் ஐயப்பனுக்கு தங்க அங்கி!

அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்க அங்கி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!

பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்பதற்கும் 'நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா' என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது.

ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!

வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.

பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சங்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் மண்டலபூஜை நாளை தொடக்கம்!

அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை தேரோட்டம் ஆராட்டு விழா...

கொத்தலு: இராஜபாளையம் ராஜூக்களின் பாரம்பரியம்!

ஒவ்வொரு சாதி தலைவர்களும் இது போல பின்பற்ற வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது, அதுவும் இந்த காலகட்டத்தில் மிக அவசியம் கூட! 

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டதில் 16 பேர் உயிரிழப்பு!

இப்படி துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு பயங்கரவாதச் செயகளில் ஈடுபடுவது பாகிஸ்தானின் வொய்ட்காலர் டெரரிஸம் குறித்து இந்தியா குறிப்பிடுவதை உண்மையாக்கி இருக்கிறது.

Entertainment News

Popular Categories