மார்ச் 20 ஆம் தேதி 3கிராமங்களில் அம்மா திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
20ம் தேதி நெல்லை மாவட்டத்தில் 3 வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் நெல்லை வட்டத்திற்குட்பட்ட நாரணம்மாள்புரம் பகுதி 1,சங்கரன்கோவில் வட்டத்திற் குட்பட்ட நாலந்துலா, அம்பாசமுத்திரம் வட்டத்திற்குட்பட்ட முக்கூடல் ஆகிய கிராமங்களில் நடைபெறவுள்ளது.
எனவே பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு உதவித்தொகை மற்றும் சான்றிதழ்கள், ரேஷன்கார்டுகள், மனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் தொடர்பான மனுக்களை கொடுத்து பயன்பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.


