நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த தொடர் கொ லை சம்பவங்கள் எதிரொலியாக டிஐஜியாக பொறுப்பு வகித்த சுமித்சரண் மற்றும் நெல்லை, தூத்துக்குடி எஸ்பிக்கள் நரேந்திரன் நாயர், துரை ஆகியோர் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
விழுப்புரம் டிஐஜி முருகன் நெல்லை சரக டிஐஜியாகவும், அதே மாவட்டத்தில் பணியாற்றிய எஸ்பி விக்ரமன் நெல்லை எஸ்பியாகவும் நியமிக்கப்பட்ட னர். இன்று காலை டிஐஜி முருகன், எஸ்பி விக்ரமன் ஆகியோர் நெல்லையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நெல்லை டிஐஜியாக பொறுப்பேற்றுள்ள முருகன், 1997ல் போடி, சிவகாசியில் டிஎஸ்பியாகவும், திண்டுக்கல், தூத்துக்குடியில் ஏடிஎஸ்பி, தொடர்ந்து திருவாரூர் மாவட்ட எஸ்பியாகவும் பணியாற்றினார். பின்னர் சென்னையில் கீழ்ப்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் துணை கமிஷனராக பணியாற்றினார். தொடர்ந்து சிபிஐயில் 5 வருடங்கள் பணியாற்றினார். பின்னர் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டிஐஜியாக பணியாற்றினார்.
நெல்லையில் இன்று டிஐஜி யாக பொறுப்பேற்ற பின் முருகன் கூறியதாவது: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொண்ட பின்புதான் எதுவும் சொல்ல முடியும். போலீஸ்காரர்கள் போலீஸ் வேலையை மட்டும் செய்ய வேண்டும். எஸ்ஐ, இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்கள் அவரவர்கள் வேலையை சரியாக செய்ய வேண்டும். காவல்துறை யில் பணியாற்றுபவர்கள் அவர வர் பணியை சட்டத்திற்குட் பட்டு கடமையுடன் செய்தால் எந்த பிரச்னையும் ஏற்படாது.


