“13 வயது பையனின் அனுபவம்” சொன்னவர்-என்.வெங்கட்டராமன். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்
1949ம் ஆண்டில் ஸ்ரீ மகாஸ்வாமிகள் ஆனந்த
தாண்டவபுரத்துக்கு விஜயம் செய்து நாற்பது நாட்கள்
தங்கியிருந்தார்கள். நான் பதின்மூன்று வயதுப்பையன்.
சிவன் கோவிலைச் சேர்ந்த திருக்குளத்தைத் தூர் வாரிச்
செப்பனிடவேண்டும் என்ற பூர்த்த தர்மத்தைத் துவக்கி
வைப்பதற்காக ஸ்ரீ ஸ்வாமிகளைப் பிரார்த்தித்துக்
கொண்டதற்கிணங்க, அவர்கள் அங்கு முகாமிட்டிருந்தார்கள்.
எங்கள் வீட்டருகே ஸ்ரீ சுவாமிகள் வந்தபோது,
‘ஆபித்வா..’ என்று தொடங்கும் ஸாமவேத மந்திரத்தைக் கூறி
பூர்ணகும்பம் கொடுத்தோம். இந்த மந்திரம், சிவ ஸ்தோத்ரமாக
வருவது. ஸாமவேதிகள், இந்த மந்திரத்தைக் கூறி,
பூர்ண கும்பம் கொடுப்பது வழக்கம்.
பெரியவாள், உடனே, ‘ந கர்மணா…’ தெரியாதா?-
என்று கேட்டார்கள். எங்கள் தகப்பனார் அந்த மந்திரத்தையும்
முழுமையாகச் சொன்னார். நானும் சொன்னேன்.
அடுத்த வீட்டில், பூர்ணகும்பம். என்னையே ‘ஆபித்வா..’
சொல்லும்படி பெரியவாள் ஆக்ஞாபித்தார்.
சொல்லிமுடித்ததும், ‘தேங்காயைத் தொடு, நீ சொன்ன
மந்திரத்தின் பவர், தேங்காய்க்கு வர வேண்டாமா?”
என்றார்கள். நான் தொட்ட பின்னர் தான் அவர்கள்
தொட்டு அனுக்ரஹித்தார்கள். இப்படியே ஒவ்வொரு வீட்டிலும்.



