“முந்தின மடாதிபதிகளின் சோதனைக்காலம்” தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (நீன்ட கட்டுரையில் ஒரு பகுதி)
நமது அருளாளரது நீண்ட,நெடிய
மடாதிபத்தியத்தின் அந்த ஆரம்ப
காலம் குறித்த சில விவரங்கள்.
ஸ்ரீமடத்தில் பீடாதிபதிகள் மாறும்போது வருவாய்
மாறி மாறி சுக்ல பக்ஷமாகவும்,கிருஷ்ண பக்ஷமாகவும்
இருக்குமாம். புரிகிறதா? ஒரு பீடாதிபதியின் காலத்தில் வளர்பிறையாக
வருமானம் ஓங்கிக்கொண்டேயிருக்குமாம்.
அடுத்த பீடாதிபதியின் காலத்தில் தேய்பிறையாகச்
சிறுத்துக் கொண்டே வருமாம்.பெரியவாளுக்கு ஐந்து
பட்டம் முந்தைய 63-ம் பீடாதிபர் காலத்தில் நல்ல
செல்வச் செழிப்பாம். அடுத்த 64-ம் அதிபர் காலத்தில்
ஒரே இடத்தில் ஐந்தாறு வருஷ முகாம். வழக்கு,வியாஜ்யம் என்று ஏற்பட்டதில் திருமகளின்
தமக்கை விஜயம் செய்யலானாளாம். அப்புறம் சேர்த்து
வைத்து அமோக வருவாயாம்.(அதற்கு முக்ய காரணகர்த்தா
ஸ்ரீபெரியவாளின் பாட்டனாரான கணபதி சாஸ்திரிகள்.)
‘ஓவர் வள்ள’லாயிருந்த இளையாத்தகுடிப் பெரியவாள்
எனப்படும் 65வது பீடாதிபர், சேர்த்திருந்த செந்திருவை
வாரி வாரி வண்மையில் வழங்கினாராம். அதனால்
அப்போது கருப்பூரில் ஏராளமான நிலம் ஸ்ரீமடத்துக்கு
உடைமையாயிருந்துங்கூட அடுத்த அதிபர், அறுபத்து
ஆறாமவர்,மஹா பெரியவாளின் பரம குருவான கலவைப் பெரியவாள் என்பவர் பட்டத்துக்கு வந்தபோது
ஒரே கடனும் கஸ்தியுமாக ஆகிவிட்டதாம். இக்கால வங்கிகளில் போட்டு வைப்பது போல அந்நாளில்
தங்கள் சொத்தை மடத்தில் போட்டு வைத்திருந்தவர்கள்
உண்டாம். அவர்களில் ஓர் அம்மாள் ஒரு தினம் பீடாதிபதிகள்
பூஜைக்குப் போகுமுன் அவரை ‘வழிமறித்து’ என்றே
சொல்லக்கூடிய அளவுக்கு நிர்பந்தப்படுத்தி, “பிராம்மணா! நான் நாதியில்லாத பொம்மனாட்டி..
உள்ளதையெல்லாம் இங்கே போட்டு வெச்சேன்.
மடமே முழுகிப் போயிடுங்கறாளே !
எனக்கானதைப் பண்ணிப்பிட்டு அப்புறம் பூஜைக்கு
ஒக்காருவீராம்!” என்று கேட்குமளவுக்கு நிலமை முற்றியதாம். ஆனால் சோதனையும்,அருளுமாக மாறி மாறிச்
செய்துவந்த சந்திரமௌளீச்வரர் அப்புறம் எதிர்பாராத
திருப்பங்களை உண்டாக்கி மடத்திற்கு ஸுபிக்ஷம்
ஏற்பட்டதாம். அதன் பின்னரே நமது மஹா பெரியவாள் பட்டமேற்றது


