சிவனடியார்களை அவமதித்த தென்காசி கோயில் நிர்வாகம்; கண்டித்து இந்து முன்னணி போராட்டம்!

hindumunnani protest in tenkasi temple - 2026

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சிவனடியார்களோடு இந்து முன்னணி திருவாசகம் பாடி போராட்டம் நடத்தினர்.

தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் கடந்த வாரம் திருவாசகம் பாடிய சிவனடியார்களிடம் பணம் செலுத்த வலியுறுத்தி அவதூறாக பேசி வெளியேற்றியதாக கருதி, அறநிலையத்துறை செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திதென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு சிவனடியார்கள் மற்றும் இந்து முன்னணி யினர் ஆர்ப்பாட்டம் நடத்த வந்திருந்தனர்.

போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கூடிய நூற்றுக்கணக்கான இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் சிவனடியார்கள் அங்கிருந்து புறப்பட்டு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில், இந்துமுன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன்,  தென்காசி மாவட்ட சிவனடியார் திருக்கூட்ட ஒருங்கிணைப்பாளர் கயிலை கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் சென்றனர்.

அங்கு காசி விஸ்வநாதரை சிவாயநம நாமாவளி பாடி வலம் வந்துபலீபீடம் அருகில் அமர்ந்து திருவாசகம் பாடினர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது கடந்த வாரம் சிவனடியார்களை அவதூறாகப் பேசி வெளியேற்றிய திருக்கோவில் நிர்வாகத்தினர் யாரும் தடுக்கவில்லை.

பல ஆண்டுகளாக நடை பெற்றுவரும் வழக்கம் போல் திருவாசகம் பாடுவோம் என்றும் தடுத்தால்போராட்டம் நடத்துவோம் என்றும் சிவனடியார் பெருமக்களோடு இந்து முன்னணி உறுதுணையாக நிற்கும் என மாநிலத் துணைத் தலைவர் பேசினார். 

நிகழ்ச்சியில் இந்து முன்னணி தென்காசி மாவட்ட துணைத் தலைவர் இசக்கிமுத்து, மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர்கள் பால்ராஜ், குளத்தூரான், உலகநாதன், ஆறுமுகம், கார்த்திகேயன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவா, மாரியப்பன், பெரியகாசி, திருமலை, மாரிமுத்து, ஈஸ்வரன் தென்காசி நகரத் தலைவர் நாராயணன், செங்கோட்டை நகர தலைவர் மாசானம் செங்கோட்டை ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, சுரண்டை நகர தலைவர் நாராயணன், தென்காசிநகர செயலாளர் சொர்ணசேகர் பாலாஜி நகர செயற்குழு உறுப்பினர் மணி, சிவனடியார் திருக்கூட்டத்தைச் சார்ந்த சத்தியபாமா உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories