‘ஸ்ரீராம் ஜென்மபூமி திரத் ஸ்சேத்திரா’ அறக்கட்டளை: மோடி அறிவிப்பு!

Published:

modi 2 - 2026

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக டிரஸ்ட் அமைக்கப்பட்டு விட்டதாக லோக்சபாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அப்போது இந்தியாவில் அனைத்து மதத்தினரும் ஒரே குடும்பம் போன்றவர்கள் என்றார்.

modi - 2026

மோடி தனது உரையில், அயோத்தியில் வஹ்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் மாநில அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘ஸ்ரீராம் ஜென்மபூமி திரத் ஸ்சேத்திரா’ என பெயரிடப்பட்டுள்ளது.

ayothi 1 - 2026

சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து ராமர் கோயில் அறக்கட்டளைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் அமைய உள்ளது. ராமர் கோயில் அமைப்பதற்கான திட்டம் தயாராக உள்ளது.

இந்தியாவில் ஹிந்து, முஸ்லிம், சீக்கியம், கிறிஸ்தவம், புத்த மதம், பார்சி அல்லது ஜெய்ன் அனைவரும் ஒரு குடும்பத்தின் அங்கம். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வளர்ச்சி அவசியம்.

modi 1 - 2026

அனைவருக்கும் வளர்ச்சி என்பதை கொள்கையாகக் கொண்டே அரசு செயல்பட்டு வருகிறது, என்றார். ராமர் கோயில் அறக்கட்டளை குறித்த அறிவிப்பை மோடி வெளியிட்ட போது அவையில் அமளி ஏற்பட்டது. ஆளுங்கட்சியினர் ஆதரித்து கோஷமிட்டனர்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!
amit sha - 2026

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையில் 15 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 15 உறுப்பினர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img