பக்தர்கள் இன்றி நடந்த வசந்த உத்ஸவம்: ஆண்டாளுக்கும், ரங்கமன்னாருக்கும்!

ஆலயங்கள் சற்றுமுன் தமிழகம் விழாக்கள் விசேஷங்கள்
andal rengmannar

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் இல்லாமல், 4 அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்ற வசந்த உற்சவம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று நடந்த வசந்த உற்சவத்தின்போது, ஆண்டாளுக்கும், ரங்கமன்னாருக்கும் திருமேனி முழுவதும் சந்தனம் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டன.

தொடர்ந்து இருவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அர்ச்சகர்கள் 4 பேர் மட்டும் இந்த வசந்த உற்சவம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.