இந்திய தேசிய கீதத்தை உணர்ச்சிகரமாய்ப் பாடிய பாகிஸ்தான் ரசிகர்: இந்திய ரசிகர்கள் நெகிழ்ச்சி!

உலகம் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

national anthom.pakistanfan - 2026

துபை : துபையில் நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த செப்.19 அன்று நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், இந்திய அணி வென்றது. ஆனால் இந்திய ரசிகர்களின் உள்ளத்தை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் வென்றுவிட்டார்.

இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியக் காண இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் பலர் வந்திருந்தனர். அப்போது, போட்டி துவங்கும் முன் இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.

இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பாகிஸ்தானைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், உருக்கமாகவும், சத்தமாகவும் இந்திய தேசிய கீதத்தைப் பாடினார். இதை தானே வீடியோவும் எடுத்து பதிவு செய்து சுற்றுக்கு விட்டுள்ளார். கறுப்பு நிற ஆடை அணிந்து கழுத்தில் பாக்., தேசியக் கொடியை அணிந்திருந்த அந்த இளைஞர் இந்திய தேசிய கீதத்தை சத்தமிட்டுப் பாடியதை அருகில் இருந்த மற்ற ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.