இவ்வளவு செய்தும்… தில்லியில் காங்கிரஸுக்கு முஸ்லிம்கள் ‘கை’ கொடுக்கலியே!

Published:

congress comittee - 2026

தில்லியில் காங்கிரசுக்கு கைகொடுக்காத முஸ்லிம்கள்: ஜவாகர்லால் நேரு ஒரு இந்துவாக இருந்தாலும் அவர் என்றைக்குமே இந்துக்களின் நலனில் சிறிதும் அக்கறை கொண்டவர் இல்லை! முஸ்லிம்களின் நலனில் தான் அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்! இன்னமும் சொல்லப்போனால் தன் சாதிக்காரர்களான காஷ்மீர் பிராமணர்களின் துயரங்களுக்கு சிறிது கூட கவலைப்படாத அவர் முஸ்லிம்களுக்காக தான் மிகவும் கவலைப்பட்டார் !

நேருவின் மகள் இந்திரா காந்தியும் கூட முஸ்லிம்களின் விஷயத்தில் தன் தந்தையைப் போல் தான் இருந்தா!ர் ராகுல் காந்தி கூட முஸ்லிம்களின் விஷயத்தில் தான் தன் முன்னோர்களைப் போலவே நடந்து கொண்டார்!

நேரு குடும்பத்துக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள உறவு நூற்றாண்டுகளுக்கு மேல்! இத்தனைக்கும் மேலாக டாக்டர் அம்பேத்கர் வடிவமைத்த இந்திய அரசியல் சட்டத்தின் முகவுரையில் மதச்சார்பின்மை என்ற வார்த்தையே கிடையாது. இந்துவான காஷ்மீர் பிராமணர் பரம்பரையை சேர்ந்தவரான இந்திரா காந்திதான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மதச்சார்பின்மை என்ற வார்த்தையை புகுத்தியவர். அவரால் தோற்றுவிக்கப்பட்டது தான் இன்றைய காங்கிரஸ் அதாவது இந்திரா காங்கிரஸ்!

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

தமிழகத்தில் முஸ்லிம்கள் சிஏஏ என்ஆர்சி என்பிஆர் தேசிய குடியுரிமை சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று போராடுகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க சென்ற மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் காங்கிரஸ் மட்டுமே தனது தேர்தல் அறிக்கையிலேயே நாங்கள் வெற்றி பெற்றால் சிஏஏ.,வை எதிர்த்து டெல்லி சட்ட மன்றத்தில் தீர்மானம், என்ஆர்சி என்பிஆர் இப்போதுள்ள வடிவில் வராது என்று குறிப்பிட்டு அதனை எதிர்த்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முஸ்லிம்கள் காங்கிரசை வெற்றிபெற செய்திருந்தால் அவர்களுக்கு ஆதரவாக தில்லி பேரவையில் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றி இருக்குமே! இன்று துப்பாக்கிச்சூட்டில், வன்முறையில் சிலர் பலியாகும் அளவில் போராட்டம் நடத்த வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது!

ஆனால் நடந்தது என்ன? 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 22.46 சதவிகித வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து இருந்த காங்கிரஸ் கட்சி டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

காங்கிரஸ் சின்னம் கை விரல்களின் எண்ணிக்கை 5. டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 4.27 சதவிகிதம்தான்! அதாவது கையில் உள்ள விரல்கள் எண்ணிக்கையை விட குறைவு! முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் சேர்ந்து அளித்த வாக்குகள் இவை. அப்படி என்றால் தில்லியில் முஸ்லிம்களின் வாக்குகள் 4.27 சதவிகிதத்திற்கும் குறைவு தானா?

டெல்லியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் டெபாசிட் பெற்ற தொகுதிகள் மூன்று மட்டுமே! அதாவது கையில் உள்ள விரல்களின் எண்ணிக்கையை விட குறைவு!

டெல்லி தேர்தலுக்கு முன் சிஏஏ.,வுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவில் போராட்டம் நடந்த ஓக்லா தொகுதியில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் மூன்று சதவிகிதம்தான்! முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் சேர்ந்து அளித்த வாக்குகள் இவை! அப்படி என்றால் அந்த தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் 3 சதவிகிதத்திற்கும் குறைவு தானா?

காங்கிரசின் பிரச்சார குழு தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத்தின் மனைவி பூனம் ஆசாத் போட்டியிட்ட தொகுதியில் அவர் 3 ஆம் இடத்துக்கு கூட அல்ல நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டார்! அவர் பெற்ற வாக்குகள் 2064 தான்! 2.23 சதவிகிதம்தான்! அதாவது முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் சேர்ந்து அவருக்கு அளித்த வாக்குகள் இவை! அப்படி என்றால் அந்த தொகுதியில் முஸ்லிம்களின் வாக்குகள் 2.23 சதவிகிதத்துக்கும் குறைவுதானா?

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

தங்களுக்கு மிகவும் சாதகமான காங்கிரசுக்கு டெல்லியில் முஸ்லிம்கள் ‘கை’ கொடுக்க வில்லையே!

  • சமூக ஆர்வலர் பி.ராமநாதன், (வாஞ்சி இயக்கம், திருமலையப்ப புரம், தென்காசி மாவட்டம்)

Related articles

Recent articles

spot_img