போலீஸார் உங்களை தொந்தரவு செய்கிறார்களா? விவசாயிகளுக்கு திருச்சி சரக டிஐஜி வெளியிட்ட அறிவிப்பு!

உள்ளூர் செய்திகள் திருச்சி லைஃப் ஸ்டைல்
trichy dig balakrishnan

விவசாயிகளை தொந்தரவு செய்தால்… திருச்சி சரக டிஐஜி முக்கிய அறிவிப்பு!

விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்காக இரு, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோரை சில இடங்களில் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்வதால், தங்களுக்கு சிரமமாக இருப்பதாக விவசாயிகளிடமிருந்து புகார்கள் வரப் பெற்றன.

இதை அடுத்து திருச்சி சரகத்துக்கு உட்பட்ட 5 மாவட்டங்களிலும் விவசாயம் தொடர்புடைய குறைகளை தீர்ப்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் டி.எஸ்.பி நிலையிலான ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி…

திருச்சி மாவட்டத்துக்கு – சிவசுப்பிரமணியன் 9498158901,
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு – குணசேகரன் 9498150081,
கரூர் மாவட்டத்துக்கு – சுப்பிரமணியன் 9498104410,
பெரம்பலூர் மாவட்டத்துக்கு – ரவிச்சந்திரன் 9498153276,
அரியலூர் மாவட்டத்துக்கு – கண்ணன் 9498167666
– ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள் இவர்களையோ அல்லது கரோனா சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ

திருச்சி: 0431-2333638,
புதுக்கோட்டை: 04322-266966
கரூர்: 04324-255100,
பெரம்பலூர்: 04328-224962,
அரியலூர்: 04329-222216

-ஆகிய எண்களிலோ தொடர்பு கொண்டு தங்களின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று திருச்சி சரக டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.