டிரிப் படக்குழுவினர் கொடுத்த கிப்ட்! மகிழ்ச்சியில் சுனைனா!

Published:

மாசிலாமணி, வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், தெறி, கவலை வேண்டாம், எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகமாகி பிரபலமான சுனைனா பிறந்த நாளுக்கு “டிரிப்” படக்குழுவினர் ஒரு கிப்ட் கொடுத்துள்ளனர். இதை பார்த்து அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

தமிழில், ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் அறிமுகமான சுனைனா, தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், தெறி, கவலை வேண்டாம், எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

17c9d4f8f1339113be502ff8fcfb190d - 2026
தற்போது ‘டிரிப்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இது அதிரடி திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. சுனைனா அதிரடி சண்டை காட்சிகளிலும் நடித்துள்ளார்.

இவரது பிறந்த நாளை முன்னிட்டு நாயுடன் முறைத்தபடி நிற்கும் அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

ed652ca91e563c6d047466bbbc8a2ae7 - 2026
‘டிரிப்’ படத்தில் பிரவீன், யோகிபாபு, கருணாகரன் ஆகியோரும் நடித்துள்ளனர். டென்னிஸ் இயக்கி உள்ளார். சிலர் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு பயணப்படுகின்றனர். அங்கு அவர்கள் சந்திக்கும் பயங்கரங்களே கதை. இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

fb80bcd0cb2c1ab72739bfd097423e2e - 2026
கொரோனா பிரச்னையால் படத்தை வெளியிட முடியவில்லை என்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தனது பிறந்த நாள் அன்று போஸ்டரை வெளியிட்டுள்ளதை கண்டு சுனைனா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img