வில்சன் கொலை வழக்கில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
kalikavalai - 2026

நாகர்கோவில் மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் வைத்து, சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்த வழக்கில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தவுபிக் மற்றும் சமீம் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் என சிலர் கைது செய்யப் பட்டு விசாரணை வளையத்தில் மேலும் சிலர் கொண்டு வரப்பட்டுள்ளனர். தற்போது இக்கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் .

இது குறித்து போலீசார் கூறியபோது.. எஸ்.எஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கில் பண பரி வர்த்தனைக்கு உடந்தையாக இருந்ததாக ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டனத்தை சேர்ந்த பிச்சைக்கனி , அமீர், முகம்மது அலி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஷேக் தாவூத் என்பவர் தப்பியோடி விட்டார். ஷேக் தாவூத் ஐ.எஸ் அமைப்புக்கு உதவியதாக தேசிய புலனாய்வு முகமை என்ஐஏ., ஏற்கெனவே வழக்கு பதிவு செய்துள்ளது என்று கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.