கொரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, தமிழகத்தில் புதிய பரிசோதனை நடைமுறை வரும் 10-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியமுடியும்.
புதிய பரிசோதனை நடைமுறைக்காக சீனாவில் இருந்து 1 லட்சம் துரித ஆய்வுக் கருவிகள் 9-ஆம் தேதியன்று கொள்முதல் செய்யப்படும் என்றும், நோய்த்தொற்றால் வரக்கூடிய காய்ச்சல், இருமல் ஆகியவற்றை போக்கக் கூடிய மருந்துகள் தேவையான அளவுக்கு முழுமையாக கையிருப்பில் உள்ளன எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் சீனாவில் இருந்து கருவி வந்தவுடன் கருவி கிடைத்தவுடன், வரும் 10-ஆம் தேதி முதல் எங்கெல்லாம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமோ அங்கெல்லாம் அனுப்பி வைக்கப்பட்டு, பரிசோதனை விரைவாக நடைபெற வழி வகுக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.