விளையாட்டு வீரர்கள் விளக்கேற்றி வேண்டுதல்! கூடுதல் பிரார்த்தனை செய்த கோஹ்லி!

virat 1

பிரதமர் வேண்டுகோளை ஏற்று இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் பலர் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றினர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனிடையே மக்கள் மின் விளக்குகளை அணைத்து விட்டு, வீடுகளில் அகல் விளக்கு ஏற்றுங்கள், அல்லது டார்ச், அலைபேசி ஒளியை ஒளிரச் செய்யுங்கள்,’ என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 5ம் தேதி இரவு 9:00 மணிக்கு இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் பலர் விளக்கேற்றினர். இந்திய அணி கேப்டன் கோஹ்லி, மனைவி அனுஷ்கா சர்மா விளக்கேற்றினர். இதற்கான போட்டோவை ‘இன்ஸ்டாகிராமில்’ வெளியிட்டார்.

எல்லோரும் ஒற்றுமையாக பிரார்த்திக்கும் போது அது வித்தியாசத்தை ஏற்படுத்தும், நல்ல பலனைக் கொடுக்கும். ஒவ்வொரு உயிர்களுக்காகவும் ஒன்று சேர்த்து பிரார்த்தனை செய்யுங்கள். பலர் தங்களது குடும்பத்தினரை இழந்து வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிலரது வாழ்க்கை முற்றிலும் தலைகீழாகி விட்டது. மருத்துவ பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் தங்களது எதிர்காலம், வேலை உறுதியில்லாத நிலையிலும் சோர்வடையாமல், மற்றவர்கள் உயிர்களை காப்பாற்ற துணிச்சலாக போராடுகின்றனர்.

virat

இவர்கள் அனைவரது துன்பங்களும் முடிவுக்கு வர வேண்டும். எல்லோருக்காகவும் கூடுதலாக பிரார்த்தனை செய்தேன். இந்தியா முழுவதும் ஒருவருக்கு ஒருவர் பிரார்த்தனை செய்துள்ளோம். நமது வேண்டுதல் வீண் போகாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல இந்திய வீரர்கள் அஷ்வின், சேவக், ரெய்னா, ஹர்திக் பாண்ட்யா, ஷிகர் தவான், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சிந்து (பாட்மின்டன்), மேரி கோம் (குத்துச்சண்டை), சுஷில் குமார், யோகேஷ்வர் தத் (மல்யுத்தம்), ஹிமா தாஸ் (தடகளம்), தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்) தங்களது வீடுகளில் விளக்கேற்றினர்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :