spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆலயங்கள்கேரளா திருச்சூரில் மிகப் பிரம்மாண்டமாக துவங்கிய திருச்சூர் பூரம் ..

கேரளா திருச்சூரில் மிகப் பிரம்மாண்டமாக துவங்கிய திருச்சூர் பூரம் ..

கடவுளின் சொந்த தேசம்,கடவுள் வாழும் பூமி என்று அழைக்கப்படும் கேரளாவில் நடைபெறும் மிகப் பிரம்மாண்டமான விழாக்களில் திருச்சூர் பூரம் முக்கியமானதாகும். கடந்த இரு ஆண்டுகளாக கொரானா பரவலால் சம்பிரதாய நிகழ்வாக நடந்த திருச்சூர் பூரம் இன்று மாலை மிகப் பிரம்மாண்டமாக துவங்கியது.

images 33
thrissur pooram 1652190197958 1652190207167
இரவிலும் நடந்த பூரம் குடைமாற்றம் விழா
newssensetn 2022 05 916dbb51 8b02 4aae 95e2 6353a97b08a9 Kudamatom at thrissur pooram 2013 7618.jfif
images 29

வடக்குநாதன் ஆலயத்தில் சிவகுமார் என்ற யானை கோவில் முன் பகுதி வழியாக வெளியேறி திடம்புவை தூக்கிவர கோலாகலமான திருச்சூர் பூரம் விழா துவங்கியது இன்று மாலை துவங்கிய விழா நாளை வரை இடைவிடாது நடைபெறும் இந்த விழாவை காண கேரளா தமிழகம் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்கின்றனர்

கேரளாவில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் விழா சித்திரை மாதத்தில் பூரம் தினத்தன்று நகரத்தின் மையத்திலுள்ள வடக்குநாதன் கோவில் முன்  கொண்டாடப்படுகிறது. இரண்டு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருவிழாவில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட யானைகளின் ஊர்வலம் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் இருந்து துவங்கி திருவம்பாடி பரமேகாவு பகவதி அம்மன் கோவிலில் முடிகிறது.

சுமார் 36 மணி நேரங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்த திருவிழாவில்  50க்கும் மேற்பட்ட யானைகள், மாயாஜால வித்தைகளான பஞ்சவாத்திய இசை கருவிகள் தொடர்ந்து ஒலிக்கும் பஞ்சவாத்தியம் மற்றும்  நிகழ்ச்சியின் முடிவில் 6 – மணி நேரத்திற்கு மேலாக வெடிக்கும் வான வேடிக்கை என கேரளாவில் கொண்டாடப்படும் பிரம்மாண்டமான திருவிழா இதுவேயாகும்.

திருச்சூர் பூரம் பூரங்களின் பூரம் என்று அழைக்கப்படுகிறது. வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் 20-லட்சத்திற்கும் மேலானோர் இன்று மாலை துவங்கிய பூரம் குடைமாற்றம்  நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு பாரம்பரிய நிகழ்வை கண்டு ரசித்தனர். கொரோனா கட்டுபாடுகளால் கடந்த இரு ஆண்டுகளாக களையிழந்த இந்த திருவிழா  இன்று பிரமாண்டமாக நடந்து வருகிறது.நள்ளிரவு முதல் நாளை காலை வரை வாணவேடிக்கை நிகழ்ச்சி வண்ணமயமாக நடைபெறுவது பூரம் விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe