
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி நீராட்ட உற்சவம் இன்று தொடங்கும் நிலையில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி நீராட்ட உற்சவம் இன்று தொடங்கி வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழா நிகழ்ச்சிகள் திருமுக்குளம் அருகில் உள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் நடைபெறும். இதையொட்டி ஆண்டாளுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நேற்று இரவில் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தாா்.
இக்கோயிலில் ஜன.2 முதல் துவங்கி ஜன11 வரை ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது. தினமும் இரவு 7:00 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாட வீதியில் சுற்றி பெரிய பெருமாள் சன்னதியில் எழுந்தருள்கிறார். அங்கு திருவாராதனம், அரையர்சேவை, பஞ்சாங்கம் வாசித்தல், சேவா காலம் என மறுநாள் அதிகாலை 5:30 மணி வரை ராப்பத்து உற்ஸவங்கள் நடக்கிறது.
எண்ணெய்காப்பு உற்ஸவம்: இன்று ஜன. 8 முதல் 15 வரை நடக்கும் மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவத்தில் தினமும் காலை 10:00 மணிக்கு ஆண்டாள் எண்ணெய் காப்பு மண்டபம் எழுந்தருள்கிறார். மதியம் 3:00 மணிக்கு அங்கு எண்ணெய்காப்பு உற்ஸவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா தலைமையில் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்