டெஸ்ட் போட்டி: இன்று… நியூசிலாந்தின் நாள்!

Published:

ind nz test
ind nz test
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இந்தியா நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி
மூன்றாவது நாள் நியூசிலாந்தின் நாள்

நியூசிலாந்து நன்றாக விளையாடிய ஒரு நாள். அப்படியென்றால் இந்தியா மோசமாக விளையாடியது அல்லது மிகவும் மோசமாக இருந்தது என்பதல்ல, ஆனால் இந்த நாளில் கிவிஸ் தங்களது திறமையைக் காட்டினர். அவர்கள் இந்தியர்களைச் சோதித்தனர். நிச்சயமாக முகத்தில் புன்னகையுடன் திரும்பிச் சென்ற அணித்தலைவர் யார் என்று கேட்டால் அது வில்லியம்சன் தான்.

நியூசிலாந்து பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பு

இரண்டாவது நாளில் கோஹ்லி மற்றும் ரஹானே ஜோடி ஆட்டமிழக்காமல் இருந்தனர். எனவே அவர்களுக்கு நன்றாக பந்து வீச வேண்டும் என்று கிவிஸ் அறிந்திருந்தனர். ஜேமீசன் ஒரு பீச் பந்து வீசி இந்திய கேப்டனை வெளியேற்றினார், அதன் பிறகு, ஜேமீசன் தலைமை தாங்கி, இந்திய வீரர்களின் வீழ்ச்சியை ஏற்படுத்தினார். அதனால் ஒரு முழுமையான சரிவு ஏற்பட்டது, இந்திய அணி 217 என்ற ஸ்கோருடன் ஆட்டமிழந்தது.

நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களான கான்வே மற்றும் லாதம் மெதுவாக ஆடினர். ஆனால் சீராக தங்கள் இன்னிங்ஸைக் கட்டிக்கொண்டிருந்தனர். இதற்குச் சிறிது நேரம் எடுத்தது. ஆனால் அஸ்வினின் ஒரு நல்ல பந்து வீச்சில் லாதம் ஆட்டமிழந்தார். கான்வே அரைசதத்தை எட்டினார், ஆனால் ஒரு தளர்வான அடி அவரை ஆட்டமிழக்கச் செய்தது.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

நியூசிலாந்து 116 ரன்கள் வித்தியாசத்தில் பின்தங்கியிருக்கிறது, அவர்களிடம் உள்ள பேட்டிங் வரிசையில், இந்த பற்றாக்குறையை ஒரு முன்னணியாக மாற்றுவதில் அவர்கள் நம்பிக்கையுடன் இருப்பார்கள், இந்திய அணி போல அவர்களது வீரர்கள் வேகமாக ஆட்டமிழக்காவிட்டால் அவர்கள் முன்னணி பெறலாம். மறுபுறம், இந்தியா அவர்களின் ஸ்கோர் மிகவும் குறைவாக இருப்பதால், விரைவாக விக்கட் எடுக்க வேண்டும். நாளைய நான்காம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3:00 மணிக்குத் தொடங்கும்.

இன்றைய ஆட்ட்த்தில் அமர்வு ஒன்றில் 24.2 ஓவர்கள் பந்து வீசப்பட்டன; 65 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுக்கப்பட்டன. இரண்டாவது அமர்வில் 24.1 ஓவர்கள் வீசப்பட்டன, 42 ரன்கள், 3 விக்கெட்டுகள் எடுக்கப்பட்டன. மூன்றாவது அமர்வில் 28 ஓவர்கள் வீசப்பட்டன, 65 ரன்கள், இரண்டு விக்கெட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன.

Related articles

Recent articles

spot_img