ஆடாம ஜெயிச்சோமடா… இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்ற இந்தியா!

eng vs ind test
eng vs ind test

கொரோனா அச்சம் காரணமாக, இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோத இருந்த 5ஆவது டெஸ்ட் போட்டி கைவிடப் பட்டதை அடுத்து, இந்திய அணி தொடரை வென்றது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நான்கு டெஸ்ட் முடிவில் இரண்டில் வென்ற இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா உறுதியானது. மேலும் பந்து வீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. அதே நேரம், இந்திய வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதனிடையே, மான்செஸ்டர் நகரில் நடத்த திட்டமிடப் பட்டிருந்த 5வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கச் சென்ற இந்திய அணியில், ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இத்தகைய பின்னடைவுகளால், மான்செஸ்டர் போட்டிக்காக வீரர்கள் எவரும் பயிற்சியில் ஈடுபடவில்லை. மேலும், டெஸ்ட் போட்டியில் களம் இறங்கி விளையாடுவதிலும் தயக்கம் காட்டியதாகத் தெரிகிறது.

இதை அடுத்து பிசிசிஐ மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, 5வது போட்டியைக் கைவிட்டு விடுவது என்று தீர்மானித்தனர். இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தெரிவித்த போது, இந்திய அணி தரப்பில் சிலருக்கு கொரோனா உறுதியானதால், அச்சம் காரணமாக வீரர்களை இந்திய அணியால் களமிறக்க முடியவில்லை என தெரிவித்தது.

இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் இரண்டில் இந்திய அணி வென்றுள்ளது. ஒரு போட்டியை இங்கிலாந்து அணி வென்றது. ஒரு போட்டி டிரா ஆனது. இதனால், இந்திய அணி 2-1 என முன்னணியில் இருப்பதால், டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றதாகக் கருதப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories