IPL2022: குஜராத் vs சன்ரைசர்ஸ்

Published:

ipl 2022 - 2026

ஐபிஎல் 2022: குஜராத் vs சன்ரைசர்ஸ்
– K.V. பாலசுப்பிரமணியன் –

நேற்று, ஏப்ரல் பதினோறாம் நாள் குஜராத், சன்ரைசர்ஸ் அணிகளுக்கிடையே மும்பையின் டி.ஒய். பட்டீல் கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 21ஆவது போட்டி நடந்தது. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிறகு 162 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 19.1 ஓவரில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 168 ரன் எடுத்து குஜராத் அணியைத் தோற்கடித்தது. வில்லியம்சன், பூரன் ஆகியோர் டைட்டன்ஸ் அணிக்கு முதல் தோல்வியை வழங்க உதவினார்கள். சன்ரைசர்ஸ் தொடர்ச்சியாக வெற்றிகளை அளிக்க, நடராஜன் சிறப்பாகப் பந்துவீசினார்.

தொடர் தோல்விகளுடன் சீசனை தொடங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அடுத்தடுத்த வெற்றிகளுடன் வெற்றிப் பாதைக்குத் திருப்பியிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இரண்டு நாட்களுக்குப் பிறகு, சன்ரைசர்ஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. ஹர்திக் பாண்டியாவின் ஆட்டமிழக்காத அரை சதம் இருந்தபோதிலும், வெற்றிக்கனியைப் பறிக்க சன்ரைசர்ஸ் அணிக்கு வழிவகுத்தவர் டி.நடராஜன்.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி குஜராத் அணியை மட்டையாடச் சொன்னது. முதல் ஓவரில் புவனேஷ்குமார் மூன்று வைடுகள், ஒரு லெக்-பை போட்டார். அதில் இரண்டு வைடுகள் பவுண்டரிக்குப் பறந்தன. இந்த வைடுகள் இல்லை என்றால் குஜராத் குறைவான ரன்களுடன் முதல் இன்னிங்க்ஸை முடித்திருக்கும்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

புவனேஷ்வர் தனது இரண்டாவது ஓவரைச் சிறப்பாக வீசினார். அதனால் ஷார்ட் கவரில் ஷுப்மான் கில் ஒரு கேட்ச் கொடுத்து அவுட்டானார். திரிபாதி பிடித்த அந்த கண்மூடித்தனமான ஒரு கை கேட்ச் ஆட்டத்தின் சிறப்பம்சம். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக, அறிமுகப் போட்டியில் 35 ரன்களைக் குவித்த தமிழக வீரர் சாய் சுதர்ஷன், மற்றொரு நல்ல தொடக்கத்தைத் தந்தார்.

நடராஜனின் பந்துவீச்சில் இரண்டாவது பந்தில் பவுண்டரி விளாசினார் பாண்டியா. இந்த ஆட்டத்தில் பாண்ட்யா ஐபிஎல்லில் தனது 100வது சிக்ஸரை அடித்திருக்கிறார். முதல் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த பிறகு, பாண்டியா தனது கடைசி 28 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். நடராஜனின் மாறுபாடுகளும், குறிப்பாக மூன்று ஓவர்கள் மட்டுமே வீசிய வாஷிங்டன் சுந்தரின் துல்லியமும் பாண்டியாவை முடக்கியது. அபினவ் மனோகருக்கு இன்று அதிர்ஷ்டம் கைகொடுத்தது.

முழங்காலில் ஏற்பட்ட காயம் மற்றும் கோவிட்-19 ஐபிஎல் 2021இல் நடராஜன் சரியாக ஆட முடியாமல் போனது. ஆனால் இந்த சீசனில் அவர் தனது சிறந்த நிலைக்குத் திரும்பியதற்கான போதுமான அறிகுறிகளை அவர் ஏற்கனவே காட்டியுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஆடத் தொடங்கியபோது கேன் வில்லியம்சன் சேஸிங்கில் முதல் கியரை விட்டு வெளியேற சிரமப்பட்டார்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

முதல் நான்கு ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே அடித்த சன்ரைசர்ஸ் அணி அவர்களின் துரத்தலை அமைதியாக தொடங்கியது. களத்தில் நாட்-அவுட் என்று கருதப்பட்ட எல்பிடபிள்யூ அலறலை பாண்டியா ரிவ்யூ செய்திருந்தால் வில்லியம்சன் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்திருக்கலாம். வில்லியம்சன் மற்றும் அபிஷேக் பவர்பிளேயின் கடைசி இரண்டு ஓவர்களில் 31 ரன்களை அடித்தார்கள்.
இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 19.1 ஓவரிலேயே தங்களது வெற்றியை உறுதி செய்தது.

Related articles

Recent articles

spot_img