ipl 2022 - 2026

IPL 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பெங்களூரு

விளையாட்டு Featured இந்தியா
ipl 2022 - 2026

ஐ.பி.எல் 2022 – 27, மே, 2022
– K.V. பாலசுப்பிரமணியன்

ராஜஸ்தான் ராயல்ஸ் vs பெங்களூரு
இரண்டாவது க்வாலிஃபையர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை (157/8, படிதார் 58*, டியூ பிளேசிஸ் 25, மேக்ஸ்வெல் 24, மெகாய் 3/23, பிரசித் 3/22) ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (161/3, பட்லர் 106*, ஹேசல்வுட் 2/23) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

அகமதாபாத்தில் இன்று நடந்த இரண்டாவது க்வாலிஃபையர் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவுசெய்தது. புதிய மைதானத்தில் பந்துவீச ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் மேற்கொண்ட முடிவு மிகச் சரியாக இருந்தது. இத்தனைக்கும் சுழல் பந்துவீச்சாளர்கள் அஷ்வின் 31 ரன் கொடுத்து ஒரு விக்கட் வீழ்த்தினார்.

மற்றொரு சுழல் பந்து வீச்சாளர் சாஹால் அதிசயமாக நாலு ஓவருக்கு 45 ரன் கொடுத்தார். ஆனால் வேகப் பந்துவீச்சாளர்கள் பிரசித் கிருஷ்ணா (3/22), மெக்காய் (3/23), போல்ட் (1/28) மிக நன்றாக பந்து வீசினர். பெங்களூருவின் பேட்டிங் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. விராட் கோலி இரண்டாவது ஓவரில் 7 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

தினேஷ் கார்த்திக் (6 ரன்) 18ஆவது ஓவரில் விளையாட வந்தார்; ஆனால் அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை. மற்றவர்களும் நிலைத்து ஆடவில்லை. டியூ பிளேசிஸ் இன்று சற்று மெதுவாக ஆடினார். அதனால் இருபது ஓவர் முடிவில் பெங்களூரு அணியால் எட்டு விக்கட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைந்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் ஆறாவது ஓவரின் முதல் பந்தில், 13 பந்துகளில் 21 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் ஆறு ஓவர்களில் அந்த அணி 67 ரன் எடுத்தது. ஜாஸ் பட்லர் 60 பந்துகளில் ஆறு சிக்சர், பத்து ஃபோருடன் 106 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

வருகின்ற 29ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை குஜராத், ராஜஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

இந்த ஐபிஎல்லில் இந்த இரு அணிகளும் இரண்டு முறை மோதியிருக்கின்றன; இரண்டிலும் குஜராத் அணி வெற்றி பெற்றிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.