காமன்வெல்த் விளையாட்டு: மூன்றாம் நாளில்..!

commonwealth games - 2026

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் – மூன்றாம் நாள்
– முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியம்-

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நேற்று, ஞாயிற்றுக்கிழமை, மூன்றாம் நாள் பளு தூக்குதலில் ஜெரிமி வென்ற தங்கப் பதக்கத்தோடு நாள் தொடங்கியது. அவருக்குப் பின் அச்சிந்தா ஷூலி 73 கிலோ பிரிவு பளுதூக்குதலில் மேலும் ஒரு தங்கம் வென்றார். ஆண்கள் ஹாக்கி அணி கானா அணியை 11-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்திய குத்துச்சண்டை வீரர் சாகர், 92 கிலோ எடைப் பிரிவில் அடுத்த சுற்றிற்கு முன்னேறியுள்ளார். மிடில் வைட் பிரிவில் இந்திய வீரர் சுமித் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் தோற்றுப் போனார். 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் ஸ்ரீஹரி நடராஜ் இறுதிப்போட்டிக்குச் சென்றார்.

பாட்மிண்டன் பிரிவில் இந்திய கலப்பு அணி அரையிறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது. சௌரவ் கோஷல் ஸ்குவாஷ் போட்டியில் காலிறுதிக்குச் சென்றிருக்கிறார். ஜொஷ்னா சின்னப்பா பெண்கள் பிரிவில் காலிறுதிக்குச் சென்றுள்ளார். லான் பௌல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி அரையிறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது.

டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்குச் சென்றுள்ளது. பெண்கள் அணி காலிறுதியில் தோற்று போட்டியை விட்டு வெளியேறியது நினைவிருக்கலாம்.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

பாட்மிண்டன் அணியின் வெற்றிப் பயணம்

இந்திய பாட்மிண்டன் அணியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்ஷ்யா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோ விளையாடுகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, ஆகர்ஷி கஷ்யப் இருவரும் ஆடிகின்றனர்.

ஆண்களி இரட்டையர் பிரிவில் சாத்விக் சாயிராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோரும் பெண்கள் இரட்டையர் பிரிவில் காயத்ரி கோபிசந்த் திரிஷா ஜாலி இருவரும் கலப்பு இரட்டையர் பிரிவில் சுமீத் ரெட்டி, அஷ்வினி பொன்னப்பா இருவரும் விளையாடுகின்றனர்.

இது குரூப் A, B, C, D ஆகிய மூன்று பிரிவுகளில் நடக்கிறது. குரூப் A பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. குரூப் B பிரிவில் இங்கிலாந்து, சிங்கப்பூர், மொரீஷியஸ், பார்படாஸ் ஆகிய அணிகளும் குரூப் C பிரிவில் கனடா, ஸ்காட்லாந்து, மாலத்தீவுகள், உகாண்டா ஆகைய நாடுகள் உள்ளன. குரூப் D தற்போதைய சாம்பியன் மலேஷியா, தென் ஆப்பிரிக்கா, ஜமைக்கா, ஜாம்பியா ஆகிய நாடுகள் உள்ளன.

குரூப் போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தானை 5-0 என்ற கணக்கிலும், இலங்கையை 5-0 என்ற கணக்கிலும், ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கிலும் தோற்கடித்தது குரூப்பில் முதலிடம் வகித்தது. காலிறுதியில் தென் ஆப்பிரிக்காவிடம் மோதி 3-0 என்ற கணக்கில் வென்றது.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

இனி அரையிறுதிப்போட்டியில் இன்று (ஆகஸ்டு 1) சிங்கப்பூருடன் மோதவிருக்கிறது. மற்றொரு அரையிறுதிப் போட்டியில் மலேஷியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories