
<-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ->
- 150 ரன்களுக்கு ஆல் அவுட்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- குல்தீப் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில் 254 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
- ஃபாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது இந்திய அணி.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. குல்தீப் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில் 254 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. எனினும் ஃபாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது இந்திய அணி.
முன்னதாக, இந்தியா, வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட், இரண்டாம் நாளின் போது, இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 404 ரன் எடுத்தது. புஜாரா 90, ஷ்ரேயாஸ் ஐயர் 86, அஷ்வின் 58, ரிஷப் பந்த் 46, குல்தீப் யாதவ் 40, தைஜுல் இஸ்லாம் 4/133, மெஹிதி ஹசன் மிராஸ் 4/112. வங்கதேச அணி முதல் இன்னிங்க்ஸ் 133/8, லிட்டன் தாஸ் 24, ரஹீம் 28, சிராஜ் 3/14, குல்தீப் யாதவ் 4/33)
நேற்று ஆட்டநேர முடிவில் 82 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் இன்று 86 ரன்னுக்கு இன்றைய தினத்தின் எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அஷ்வின், குல்தீப் யாதவ் இருவரும் இணைந்து அணிக்கு 92 ரன்கள் சேர்த்தனர். உணவு இடைவேளைக்குப் பின்னர் இந்திய அணி 404 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.
அதன் பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸை ஆட வந்த வங்கதேச அணி முதல் பந்தில் முதல் விக்கட்டை இழந்தது. தேநீர் இடைவேளையின்போது அந்த அணி இரண்டு விக்கட் இழப்பிற்கு 37 ரன் எடுத்திருந்தது. அதன் பின்னர் குல்தீப் யாதவின் சிறப்பான பந்து வீச்சால் வங்கதேச ஆட்ட நேர முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.