அர்ஜூனா விருதுக்கு தமிழக வீரர் பரிந்துரை

07 Sep17 Aurna award - 2026

கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோரின் பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. இந்தாண்டுக்கான இவ்விருதுக்கு அனைத்து விளையாட்டு பிரிவுகள் சார்பில் வீரர், வீராங்கனைகள் பரிந்துரைக்கப்பட்டனர். இதில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, பேட்மின்டன் வீரர் கிடாம்பி காந்த் ஆகியோரின் பெயர்களை விருதுக்கமிட்டி தேர்வு செய்து மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரைத்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களில் விருது பெறுவோரை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தேர்வு செய்வார்.

29 வயதாகும் கோஹ்லி 2016ம் ஆண்டிலும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் தேர்வுக்கமிட்டியின் இறுதிப் பட்டியலில் அப்போது கோஹ்லியின் பெயர் இடம் பெறவில்லை. தற்போது மிகச்சிறப்பான பார்மில் உள்ள கோஹ்லி ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நம்பர்-1 வீரராக இருக்கிறார். கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார். இம்முறை கோஹ்லி தேர்வு செய்யப்படும் பட்சத்தில், சச்சின் டெண்டுல்கர் (1997), மகேந்திர சிங் டோனி (2007) ஆகியோருக்குப் பிறகு கேல் ரத்னா விருதை பெறும் 3வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெறலாம். முன்னதாக கடந்த ஆண்டு கோஹ்லிக்கு பத்ம  விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மீராபாய் சானு கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதலில் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டிலும் அவர் தங்கத்தை கைப்பற்றினார். சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டில் காயம் காரணமாக சானு பங்கேற்கவில்லை. விருது வழங்கும் விழா வரும் 25ம் தேதி டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடக்க உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

அர்ஜூனா விருதுக்கு 20 வீரர், வீராங்கனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் தேர்வாகி உள்ளார். பரிந்துரைக்கப்பட்ட மற்ற வீரர், வீராங்கனைகள்: நீரஜ் சோப்ரா (வில்வித்தை), ஜின்சன் ஜான்சன் (தடகளம்), ஹிமா தாஸ் (தடகளம்), சிக்கி ரெட்டி (பேட்மின்டன்), சதிஷ் குமார் யாதவ் (குத்துச்சண்டை), ஸ்மிரிதி மந்தனா (கிரிக்கெட்), சுபன்கர் ஷர்மா (கோல்ப்), மன்பிரீத் சிங் (ஹாக்கி), சவிதா புனியா (ஹாக்கி), ரவி ரத்தோர் (போலோ), ரஹி சர்னோபட் (துப்பாக்கி சுடுதல்), அங்குர் மிட்டல் (துப்பாக்கி சுடுதல்), ஷிரேயாசி சிங் (துப்பாக்கி சுடுதல்), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), ரோகன் போபண்ணா (டென்னிஸ்), ஸ்மித் (மல்யுத்தம்), பூஜா காடியன் (வுஷூ), அங்குர் தமா (பாரா தடகளம்), மனோஜ் சர்கார் (பாரா பேட்மின்டன்).

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories