தியோதர் டிராபி: டெல்லியில் இன்று தொடக்கம்

01 Oct23 Dhin Dhodhar - 2026

இந்தியா ஏ, பி, சி அணிகள் மோதும் தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்குகிறது. மொத்தம் 3 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற 2 அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த சுற்றில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 27ம் தேதி இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. இந்தியா ஏ அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா பி அணி ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலும், இந்தியா சி அணி அஜிங்க்யா ரகானே தலைமையிலும் களமிறங்க உள்ளன.இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ – இந்தியா பி அணிகள் மோதுகின்றன. நாளை இந்தியா பி – இந்தியா சி அணிகளும், நாளை மறுநாள் இந்தியா ஏ – இந்தியா சி அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் நெருங்கி வரும் நிலையில், அனுபவ வீரர்கள் அஷ்வின், கார்த்திக், ரகானே, ரெய்னா போன்றவர்கள் தேர்வுக் குழுவினரின் கவனத்தைக் கவர இந்த தொடரை நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷாவின் அதிரடி ஆட்டமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!

இந்தியா ஏ: தினேஷ் கார்த்திக் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), பிரித்வி ஷா, அன்மோல்பிரீத் சிங், அபிமன்யு ஈஸ்வரன், அங்கித் பாவ்னே, நிதிஷ் ராணா, கருண் நாயர், குருணல் பாண்டியா, ஆர்.அஷ்வின், ஷ்ரேயாஸ் கோபால், ஷாம்ஸ் முலானி, முகமது சிராஜ், தவால் குல்கர்னி, சித்தார்த் கவுல்.இந்தியா பி: ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), மயாங்க் அகர்வால், ரித்துராஜ் கெயிக்வாட், பிரஷாந்த் சோப்ரா, ஹனுமா விஹாரி, மனோஜ் திவாரி, அங்குஷ் பெய்ன்ஸ் (விக்கெட் கீப்பர்), ரோகித் ராயுடு, கே.கவுதம், மயாங்க் மார்கண்டே, ஷாபாஸ் நதீம், தீபக் சாஹர், வருண் ஆரோன், ஜெய்தேவ் உனத்காட். இந்தியா சி: அஜிங்க்யா ரகானே (கேப்டன்), அபினவ் முகுந்த், ஷுப்மான் கில், ரவிகுமார் சமர்த், சுரேஷ் ரெய்னா, சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விஜய் ஷங்கர், வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், பப்பு ரே, நவ்தீப் சாய்னி, ரஜ்னீஷ் குர்பானி, உமர் நசீர்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories