இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. 3 ஒருநாள் போட்டியில் நாட்டிங்காமில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியசத்திலும், லண்டனில் நடந்த 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 86 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இங்கிலாந்து தொடரில் தினேஷ் கார்த்திக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இன்று ஆட்டத்திலாவது கேப்டன் கோலி வாய்ப்பு வழங்குவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் நாளை மோதுவது 99-வது போட்டியாகும். இதுவரை நடந்த 98 ஆட்டத்தில் இந்தியா 40-ல், இங்கிலாந்து 53-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. 3 போட்டி முடிவு இல்லை.



