December 5, 2025, 7:25 PM
26.7 C
Chennai

Tag: இம்ரான்கான்

சீன அதிபர் இந்திய வருகைக்கு முன் இம்ரான்கானுடன் சந்திப்பு!

சீன அதிபர் ஷி ஜின்பிங் தனது இந்திய வருகைக்கு முன்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 11-ஆம் தேதி இந்தியா வருகை தரும் சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி இருவரும் மாமல்லபுரத்துக்கு வருகை தரவுள்ளனர். அங்கு இரு நாடுகளின் உறவு தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக இருநாடுகளுக்கு இடையிலான லடாக் எல்லைப் பிரச்னை உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அக்டோபர் 08-ஆம் தேதி சீனா செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாம் அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இம்ரான் கான், சீனா செல்வது இது 3-ஆவது முறையாகும். சீன அதிபரின் இந்திய வருகைக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் சீனா செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்

இம்ரான் கானுடன் மோதலில் ஈடுப்பட்ட நஜம் சேதி, பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்து அந்த கடிதத்தை இம்ரான்...

பதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றபோது உருது வார்த்தைகளை உச்சரிப்பதில் திணறினார். பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் வெற்றி பெற்றார்....

இன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் இன்று பதவியேற்கிறார். பாகிஸ்தானில் கடந்த நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் கட்சி, 115 இடங்களில் வெற்றி...

“பாக். ராணுவ பொம்மையாக இம்ரான்கான் இருப்பார்” – இம்ரானின் முன்னாள் மனைவி பேட்டி

பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 115 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. எனினும், பெரும்பான்மையை பெற...

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் கராச்சி தொகுதியில் போட்டியிடும் இம்ரான் கான்

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் கராச்சி தொகுதியில் போட்டியிட முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான்கான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 342 தொகுதிகளைக்...