பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் இன்று பதவியேற்கிறார். பாகிஸ்தானில் கடந்த நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் கட்சி, 115 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க இன்னும் 137 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை அந்தக் திரட்டியது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சியாக செயல்பட நவாஸ் ஷெரீப்பின் பி.எம்.எல். கட்சியும், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் முடிவு செய்துள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வரும் 18ஆம் தேதி பதவியேற்க இருப்பதாக, அவரது கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



